பாலக் சப்பாத்தி செய்முறை
நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த கால சூழலுக்கு தகுந்த உணவு பாலக் (கீரை) சப்பாத்தி செய்முறை – palak chapathi.
தேவையானவை
- இளம் பாலக்கீரை 2 கைப்பிடி
- கோதுமை மாவு ஒரு கப்
- பூண்டு 3 பல்
- மிளகாய்வற்றல் 1 சின்னது
செய்முறை
பாலக் கீரையை நன்றாக கழுவி கொண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு (கீரை மூழ்கும் அளவு போதும்) அதில் கீரையுடன், பூண்டு, மிளகாய் வத்தல் போட்டு ஒரு 5-7 நிமிடம் மிதமான தீயில் வெந்தால் போதும். அதிகம் வெந்தால் கீரை நிறம் மாறிவிடும். பிறகு வெந்ததை மிக்ஸியில் போட்டு நன்றாக மைய அரைத்து கொள்ளவும் – palak chapathi.
வேக வைத்த நீரையும் அதனுடன் சேர்த்து கொள்ளலாம். அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு கோதுமை மாவு (அரைத்த கீரையின் அளவிற்கேற்ப) சேர்த்து, வழக்கமான சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து, சப்பாத்தியை இட்டு, சுட்டு எடுக்கவும், மிகவும் மிருதுவாக இருக்கும், மசாலா வாசனை பிடிப்பவர்கள் கரம் மசாலா பவுடர் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
இதே பாணியில் பூரியாகவும் போட்டு எடுக்கலாம் . மிகவும் சுவையான சத்தான டிபன் இது.
– தி.வள்ளி, திருநெல்வேலி.
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பாலக்சப்பாத்தி
பாலக் சப்பாத்தி சுவையான சுலபமான
ஆரோக்கியமான உணவு
வள்ளி அவர்களுக்கு நன்றி, பயனுள்ள சத்தான உணவு..
ஆரோக்கிய உணவு தந்த வள்ளி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
நல்ல ஊட்டச்சத்து மிக்க சப்பாத்தி.செய்து பார்க்க ஆவலாய் உள்ளது. வள்ளி அவர்களுக்கு என் பாராட்டுகள்.