பொது கவிதைகள் தொகுப்பு – 5
ஆன்மீகவாதி, குறியீடு கவிஞர் என பன்முகம் கொண்ட சிவசரன் அவர்களின் கவிதை “ஒற்றை மரம்” மற்றும் கவி தேவிகா அவர்களின் கவிதை “நீயில்லா தருணங்கள்” சேர்ந்து ஒரே தொகுப்பாக – pothu kavithaigal thoguppu 5
ஒற்றை மரம்
நிழல்பரப்பி நீள்கிறது
மரம்…
வேர்பருக்க விசாலம் காணும்….
காற்றுக்குள் ஊடுருவி இசைக்கும் இலை….
இட்டக்குஞ்சாய் விதை சுமக்கும் பழமரங்கள்…
முழுமையுற்று கனிகள் விடைசொல்லி போகும்…….
காய்த்தலும் உதிர்தலும் நிகழும்
மரவீட்டில்… இலையுதிர்த்து….
தன்னைத்தான் பார்த்துக்கொண்டே
புதுபித்துக் கொள்கிறது
ஒற்றை மரம்….
– சிவசரன், செங்கோட்டை
நீயில்லா தருணங்கள்
நடைபிணமாக நகர்கிறது
நீயும் நானுமற்ற
நாட்களின் நாழிகைகள்……. – pothu kavithaigal thoguppu 5
உன்னோடு உரையாடாது
உலர்ந்த இதழ்களாக
உயிரற்றுபோகிறது பொழுதுகள்……
கடக்க முயற்சித்து
நுரையீரல் தீண்டாது
மூர்ச்சையாகிறது உயிர்மூச்சு…..
உயிரற்ற உடலாக
உலவும் உள்ளத்தை
உயிர்ப்பிக்கிறது உன்நினைவுகள்…..
கனவுகளில் காட்சிபடுத்தும்
காரியங்கள் நிதர்சனத்தில்
நீங்காது நிலைத்திருப்பதெப்போது….
– கவி தேவிகா, தென்காசி.
மிகவும் அருமை
இரண்டு கவிதை களும் நன்றாக இருக்கின்றன வாழ்த்துக்கள்
இரண்டு கவிதைகளும் அருமை! கவிஞர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!💐💐💐
மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் நீரோடைக்கு….
தந்தையின் கவிக்கு பாராட்டுகள்..💐💐💐
தந்தை,மகள் இரு கவிகளின் சங்கமும் அற்புதம், பாசத்தில் மட்டுமல்ல படைப்பிலும் ஒருவரை ஒருவர் மிஞ்சி விட்டனர்…வாழ்த்துகள்
SUPERB
ஒற்றை மரம் தான் ஆனால் ஓராயிரம் அர்த்தங்கள்..
நீயில்லாத் தருணங்கள் நிழல் உலகம் மறந்த ஓர் வாழ்க்கை..
இருவரின் கவிதைகளும் அருமை👌
வாழ்த்துக்கள் கவிகளுக்கு..!
வரிகளில் இருவரும் திறனை நிரூபித்துள்ளனர். இரண்டு படைப்புகளும் அருமை.