சிவசரன் கவிதை
செங்கோட்டையை சேர்ந்த அன்பர் சிவசரன் அவர்கள் எழுதும் கவிதை புத்தகத்தில் இருந்து சில கவிதைகளை வழங்கியுள்ளோம், விரைவில் அவரது கவிதை புத்தகம் வெளியிடப்படும் – sivas kavithai thoguppu

அகத்துள் நிறைந்து உன்னையும் என்னையும் ஆட்டுவிக்கும் அணுவின் கூட்டாம் உயிரின் நிலைதனை உணர்தல் போன்றதொரு அற்புதம்…. என் கவியின் சொற்பதம்….
நீர்த்திவலை
ரூபம் கொள்ளும் நீர்த்திவலைகள்; தெறித்த
விரல் விரயத்தின் கதை
ஓவியங்கள்; கழிப்பறை சுவற்றில்
ஒட்டிக்கொள்ளும் ராஜா ராணி கதைகள்;
குருபோதித்த ஆலமரம்;
தலைகீழாய் சீடர்கள்;
உருக்குலைந்த உயிரின தோன்றல்கள்;
தேசங்களாய் சிதறிப்போன மானுடம்;
இரு கூறுகளிலன் உயிரணு;
உதறல்களின் திரவம் சொல்லும்
கதைகளம்;
சிவசரன், செங்கோட்டை.
வெளியில் புலப்பபடாது
அண்ட வெளியில் சுற்றிதிரியும் ….
ஜீவநதியின் பிம்பம் நான்…..
அருமையான அகக்கவியின் சொல்லாடல்….மேலும் மேலும் பயணப்பட்டு பல வர்ண ஜாலங்களை கவிதையில் மேற்கொள்ள கவிஞருக்கு வாழ்த்துகள்💐💐💐
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சிவா அவர்களின் “நீர்த்திவலை” என்ற இந்த ஒரு கவிதையே அவரின் கவித்திறனை பேசுகிறது. விரைவில் கவிதை தொகுப்பு வெளி வர வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை..நீர்திவலைகள் சாரலாய் தெறித்தன..கவிஞர்.ஷிவாஸ் அவர்களுக்கு பாராட்டுகள்.
கவிதை அருமை படிப்பவர்களுக்கு பெருமை
Experience proveed.. very good lines..