உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும்
பிரியமானவளே,
உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும்.
நீ சந்திக்கும் சந்தர்ப்பங்கள் யாவும்,
உன்னை என்னுடன் வாழத் தடைகள்
சுமந்து வந்தாலும்,பிரிவு என்ற சொல்லில் முடிவதில்லை.
என்னை பிரிந்து வெகுதூரம் செல்ல நீ நினைத்து பயணித்தாலும்,
அங்கும் உன் பாதையாக மாறிக்கிடப்பேன்.
கற்பனையில் நான் தேக்கி வைத்த என் பிரியங்கள் யாவும் சங்கமித்து
உன்னை கைபிடிக்க…,
விரல்கள் தளர்த்து நீ விடுபட முயற்சித்தால் எப்படி சம்மதிப்பேன்.
காதலில் என்னை வென்றுவிட்டு போ !
இல்லையேல் என்னைக் கொன்று விட்டுப் போ !
விளையாட்டுப் பிள்ளை தான் நீ!
உன் விளையாட்டுப் பொருளல்ல நான் !
நீ விளையாடும் தாய்மடி நான்.
பிரியமானவளே உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும்.
– நீரோடை மகேஷ்
/// அங்கும் உன் பாதையாக மாறிக்கிடப்பேன்… ///
அருமை… வாழ்த்துக்கள்…
// விளையாட்டுப் பிள்ளை தான் நீ!
உன் விளையாட்டுப் பொருளல்ல நான் !
நீ விளையாடும் தாய்மடி நான்.
//
அழகிய வரிகள் ..
அருமையான கவிதை நண்பா
அருமையான கவிதை !! வாழ்த்துக்கள்