வலையோடை பதிவு 7
சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 7
வாழ்வை வெறுத்தவன்…வலிகளை கூறுவான்…வாழ்வை உணர்ந்தவன்…வழிகளை கூறுவான்..!
@AnjaliTwitz
ரத்து ஆகி போன ரயிலுக்கு யார் காத்து இருப்பார்கள்.? தண்டவாளங்களை தவிர – மனோகுட்டி
@TRAMESH21548526
விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடுங்கள் சலித்துப்போற அளவுக்கு அன்பை நிரூபிக்காதீர்கள்.
@THARZIKA
உதிர்காலம் என்பது…
சருகுகளின் குவியல் அல்ல..
அஃது உயிர்த்தலுக்கான
அடிப்படைகளை
சரிபார்த்தல்..
@Rahmath_Krish
அன்பின் அழகியல்
உயரங்களில் இல்லை
உளங்களில்தான் இருக்கிறது
@weknowth827
நீ “முடியாது^ என்று உதறித் தள்ளிய செயல் இன்னொருவருக்கு “முடியும்” என்ற நம்பிக்கையை வளர்க்கிறது…!!!!
@sankariofficial
மரணம் என்பது
பறவைகளுக்கு தான்
இறகுகளுக்கு அல்ல..!
@Aakashkannan96
– valaiyodai part 7
முகவரி தெரிந்தும் தாண்டிப் போகிறவர்களுக்கு
தெருவின் அடையாளம் மட்டுமே போதுமாயிருக்கிறது
@Lakshmivva1
நீண்ட நாள் தனிமையை விரும்பினால் பக்குவப்பட்டு விட்டோம் என்று
இந்த உலகம் நம்புகிறது.
@THARZIKA
நீ “முடியாது^ என்று உதறித் தள்ளிய செயல் இன்னொருவருக்கு “முடியும்” என்ற நம்பிக்கையை வளர்க்கிறது…!!!!
@sankariofficial
சிறப்பு! 👏
ஒருவரின் அவநம்பிக்கை அடுத்தவரின் முதலீடாவதை அழகாகக் குறிக்கிறது! இதையே,
‘எவராலும் முடியாது என்பது
எனக்குத் தெரியாது
எனவே
என்னால் முடிந்தது!’ என்று நயம்பட உரைப்பர்.
ரத்தாகிப் போன ரயிலுக்கு யார் காத்திருப்பார் தண்டவாளங்களை தவிர…அருமையான வரிகள் ..அனைத்தும் அருமை
படிக்கும் போது யாவரின் பட்டறிவோ’? என்று எண்ணத்தோன்றுகிறது