விநாயகர் சதுர்த்தி 2019

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அவல், அப்பம், சுண்டல், வடை, பொரி என நிவேதனங்கள் செய்கிறார்க்ள். வாழை, நாவல், திராட்சை, விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என பிள்ளையாருக்கு படைத்து வழிபடுகின்றனர் – vinayagar chathurthi.

விநாயகர் சதுர்த்தி விரதம்

விநாயகர் சதுர்த்தி விரதத்தால் தான் நினைத்ததை அடைந்தார் பார்வதி என்கிறது புராணங்கள். இன்றைக்கும் பெண்கள் மனதில் நினைத்தவரை கணவராக கரம் பிடிக்க விநாயகர் சதுர்த்தி விரதம் இருந்து வழிபடலாம். மேலும் உடல் ஆரோக்கியம் வளரும் நிலைக்கவும் எல்லா வளங்களும் சேரவும், விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தினருக்கும் விநாயகர் அருள் புரிவார் – vinayagar chathurthi.

பொதுவாக யானைமுகமும், மனித உடலுமாக காட்சியளிக்கும் விநாயகர், பல்வேறு வடிவங்களிலும் கோவில்களில் காட்சியளிக்கிறார்.

கிருத யுகம்
காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.

திரேதா யுகம்
அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்

துவாபர யுகம்
கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.

கலி யுகம்
சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது.

ஸ்லோகங்கள்

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.

விநாயகரின் வேறு பெயர்கள்

  • பிள்ளையார்
  • கணபதி – கணங்களிற்கு அதிபதி.
  • ஆனைமுகன் – ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
  • கஜமுகன் – கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும்.
  • விக்னேஸ்வரன் – விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்.

பிள்ளையார் என்ற பெயர் வந்ததன் கதை

ஒரு முறை பார்வதி தேவி குளிக்க செல்லும் பொழுது காவலுக்கு ஆள் இல்லாததால், தன் உடலில் உள்ள அழுக்கால் ஒரு சிறுவன் உருவத்தை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிற்க வைத்துச் சென்றார்.

தியானம் முடிந்தபின் கைலாய மலையில் இருந்து வந்த சிவபெருமானை உள்ளே செல்ல விடாமல் தடுத்த அச்சிறுவனை கண்டு சிவபெருமான் சினம் கொண்டு தன் சூலத்தால் தலையை துண்டித்தார். பின்னர் அச்சிறுவன் பார்வதிதேவியின் மகன் என்பதை அறிந்து அச்சமுற்ற சிவபெருமான் பார்வதிதேவி குளித்துவிட்டு வரும்முன் உயிர்ப்பிக்க முடிவெடுத்தார். தன் பூதகணங்களை அழைத்து முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை கொண்டு வருமாறு உத்தரவிட்டார். பூதகணங்களும் யானையை பார்த்ததால் யானையின் தலையை கொண்டு வந்தனர்.

சிவபெருமான் யானைத் தலையைப் பொருத்தி அச்சிறுவனுக்கு உயிர் கொடுத்தார். குளித்து விட்டு வந்த பார்வதி இந்தப் பிள்ளை யார் என்று கேட்டதால் இவருக்கு பிள்ளையார் என்ற பெயர் சூட்டி தன் மகனாக ஏற்றுக் கொண்டார் சிவபெருமான்.

You may also like...