என்ன புண்ணியம் செய்தேன் தாயே

தாயே உன் வயிற்றில் பிறக்க
அந்த நட்சத்திரங்களும்
துடிக்கும்.உன் மடியில் மகவாய்த் தவள
அந்த நிலா மகளும்
ஏங்குவாள்.

yenna punniyam seithen thaaye

வீட்டுக் கூரையில் வாழும் நெசவாளி
அந்த சிலந்திக்கும்,
தாழ்வாரத்தில் கூடு கட்டிய
குழவிக்கும்
கரிசனம் காட்டுபவளே
உன் வயிற்றில் புழுவாய்ப்
பிறந்தாலும் புண்ணியம் தானம்மா !…

நான் மகவாய் உன் மடியில் தவழ்ந்த நாட்களில்
தினமும் பொறாமைக் கண்கொண்டு
பார்க்கிறது அந்த
விண்மீன் கூட்டமும்
ஒற்றை நிலவும் ………..

– நீரோடை மகேஷ்

You may also like...

2 Responses

  1. sambu gan says:

    கவிதை அருமை

  2. Prabaharan T says:

    Hi , Nice poem. But try to avoid "DI". You can use this word anywhere to anybody but to Mom. Its not Good to use that word. Its just my suggestion. All the Best.,