சிறகுகள் விரித்துவிடு
மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் தன்னம்பிக்கை வரிகள் – thannambikkai kavithai
சிறகடிக்க கற்றுக் கொள்!
மனமே!!
சிறகடிக்க கற்றுக்கொள்!
சிந்தனை சிதைந்துவிடில்
சிறகுகள் முடங்கிடுமே!
சிறகுகள் முடங்கிவிடின் மனம்,
செயல்திறன் இழந்திடுமே!
செயல் திறனற்று விடின், செல்லாக்காசாகிடுமே
வாழ்க்கை!!
கவலை எனும் சிறிய நூல்,
கட்டிடுமே நமை வாழ்வில், கவனங்கள் சிதறிடுமே!!
காரிருளில் தள்ளிடுமே!!
தன்னம்பிக்கை எனும்
தாரக மந்திரம்..
தகர்த்திடுமே தடைக்கற்களை!!
நம்பிக்கையெனும்
நட்சத்திர ஒளியிலே,
நடந்திடலாம் பாலையிலும்!! – thannambikkai kavithai
பயனற்ற சிந்தையால்,
பலமற்று போகாதே!!
கவலைகள் களைந்துவிடு!
காரியம் ஆற்றி விடு!
சிந்தனை தெளிந்து விடு மனமே…
சிறகுகள் விரித்து விடு!!!
– தி.வள்ளி, திருநெல்வேலி
வாழ்க்கை வாழ்வதற்கே சிறகுகள் விரியட்டும்
“சிறகுகள் விரித்து விடு” (வள்ளி அவர்கள் எழுதிய) கவிதையில் ஒன்றின் செயலைத் தொடர்ச்சியாகச் சொல்லி இருப்பது அருமை!
விரித்த சிறகுகளை உதறினால்நம்பிக்கை
மலர்கிறது. வாழ்த்துக்கள் வள்ளி.
மிக சிறப்பான வரிகள்.. 👍 சிறகுகள் விரிக்க தயங்கும் மனங்களில் வேரூன்றி
சிறகுகளை விரித்திட வைக்கும் வரிகள்..
நம்பிக்கை ஊட்டும் நற்கவிதை. வாழ்த்துகள்
நன்றி ..நண்பர்களே…ஆக்கமான செயல்களுக்கு ஊக்கமிகு வார்த்தைகள் உரமாய் அமையும் என்பதில் ஐயமில்லை