அம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு
கவிஞர் மணிகண்டன் அவர்களின் அம்மா கவிதையும், கவிஞர் பூமணி அவர்களின் அடுத்த பிறவி எதற்கு அம்மா வரிகளின் தொகுப்பு – amma kavithai thoguppu.
அம்மா
அதிகாலை அக்கடானு திரும்பி படுக்கும் யோசனையுமில்ல,
சேவலையும் எழுப்பி கடுங்காப்பி குடுத்துப்புட்டு,
நேத்து வெச்ச இராவு சோத்த தூக்குபோசியில ஊத்திக்கிட்டு…
கண்ணாடியும் பாத்ததில்ல,
கண்ணு மையும் வெச்சதில்ல,
கசங்கிய கட்டாங்கியையும் சரி செய்ய நேரமில்ல,
ஆக்கி வெச்ச அரிசி சோத்த ஆற அமர சாப்பிடலாமுனு எனக்குமிங்கு ஆசைதாங்க,
ஆனா – amma kavithai thoguppu
நாலுவாயி சாப்பிட்டதும் நாழி ஆகிடுச்சுனு கூவும்
போது நானுமிங்கு என்ன செய்ய…!!
அன்னநடை நடக்கலாமுனா கொஞ்சம் கூட காலமில்ல,
அரக்கபறக்க நடக்கலாமுனா அதுக்கான வயசுமில்ல,
புடுங்கி போட்ட கல்லக்கொடி தான் கொழுத்தும்
வெயிலுக்கு எங்க தலைக்கு ஏசியிங்க…
பொரிச்சு போட்ட கல்லக்காய அளந்து பாத்துட்டு போகும் போது அந்திமாலையே ஆகிடுமுங்க…
கண்ணு இரண்டும் சொக்கும்…
குடிச்ச தண்ணி கூட விக்கும்…
ஆனா என் கண்மணிகளை பாக்கும் போது பட்ட
கஷ்டமெல்லாம் திக்குத் தெரியாம பறக்கும்…
இப்படிக்கு
அம்மா…!
– மணிகண்டன் சுப்பிரமணியம், கோபிசெட்டிபாளையம்
அடுத்த பிறவி எதற்கு
அம்மா !
நீ பாத்திரம் தேய்த்த கைகளுக்கு
நான் மருந்தாகமாட்டேனோ !
நீ செருப்பில்லாமல் நடந்து
முட்குத்திய
உன் பாதங்களுக்கு
நான் செருப்பமாட்டேனோ !
நீ அடுப்பு புகையில் சிக்கி ஒளி மங்கிய உன் கண்களுக்கு
நான் ஒளியாகமாட்டேனோ !
நீ விறகு வெட்டும் நேரத்தில் வழியும் உன் வியர்வையை துடைக்க
நான் தென்றலாக வந்து சேவை செய்யமாட்டேனோ !
வெயிலில் வேலை பார்த்து களைத்த உனக்கு
நான் மழையாக மாறி
உன் தாகம் தீர்க்கமாட்டேனோ !
நீ உடல் வலியால் தரையில் படுக்க
என் மடியை உனக்கு மெத்தையாக மாட்டேனோ !
அடுத்த பிறவி எதற்கு
அம்மா !
இப்பிறவியில் !
“உன்னை சுமக்க காத்திருக்கிறேன்”
உன் தாயாக !
– க.பூமணி, செஞ்சி, விழுப்புரம்
அன்னை பற்றிய அழகான வரிகள்🤱🤱🤰🤰
கவிதைகள் அருமை
இரண்டு கவிதை யும் நன்கு இருக்கிறது
அம்மா அழகாகிறார் பூமணியின் பூ போன்ற மணியான மென்மை வரிகளால்..
வாழ்த்துக்கள்
இரு கவிதைகளும் அருமை.. கவிஞர்கள் மணிகண்டன், பூமணி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். கசங்கிய கண்டங்கியுடன், கல்லக்கொடி தலையில் போட்டு, வயக்காடு சென்று வரும் தாயாகட்டும் …இப்பிறவியிலேயே தாய்க்கு எல்லாமாய் இருந்து சேவை செய்ய விரும்பும் மகனைப் பெற்ற தாயாகட்டும் போற்றுதற்குரியவர்கள்…
Super and True wrds…
கவிஞர் மணிகண்டன் அவர்களின் கவிதை அம்மா பிள்ளையை நினைத்து வாழ்வதையும்,
பூமணி அவர்களின் கவிதை பிள்ளை அம்மாவை நினைத்து வாழ்வதையும் காட்டுகிறது …சிறப்பு.
பட்ட கஷ்டமெல்லாம்
பிள்ளையைப் பார்த்ததும்
பறந்தே போச்சு!
அம்மாவுக்கு பட்ட கடனை
தீர்க்க இன்னொரு பிறவி வேண்டாம்
இந்த பிறவியிலேயே
உனக்கு நான் அன்னையாக வேண்டும்!
அருமை..வாழ்த்துகள்.
நம்மை உருவாக்கிய அம்மா வை கவியின் மூலமாக அழகாய் உருவாக்கிய இரு கவிஞர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்
இரண்டு கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்…கவிதைகள் அருமை….
இரண்டு கவிதைகளும் அருமையாக இருக்கின்றன. அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!!
இரண்டு கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள். அவரின் தாயார்களுக்கு வணக்கங்கள்.