தூய்மை பணியாளர்கள்

நீரோடையின் ஐந்து கவிஞர்களின் கவிதை ஒரே தலைப்பில் “தூய்மை பணியாளர்கள்”, தொற்று (தொற்றில் தோற்றுப் போகாமல்) வராமல் காக்கும் துப்புரவு பணியை நமக்காக செய்யும் நமது தோழர்களுக்கு சமர்ப்பணம் – thuimai paniyalargal kavithai.

thuimai paniyalargal kavithai

துப்புரவே மனித நேய பணி,
துப்புரவே மகத்தான தூய பணி,

சில்லும், கல்லும் பட்டு விறல் சிவக்கா நாளுண்டோ??!!!
நோய்க்கும், பிணிக்கும் அஞ்சி அசராத வாழ்வுமுண்டோ??!!!

வந்ததும் காப்பவன் மருத்துவன்,
வராமல் காப்பவன் துப்புரவாளன்,
நிழலிலும் அழுக்கெடுப்பவன்
நீ மட்டுமே,

காற்றையும் வடிகட்டி
உலகவுயிர்களை காப்பவன்
நீ மட்டுமே. – நீரோடை மகேஷ்..


இவர்களின்றி இங்கே
ஒரு அணுவும் அசையாது…
துர்நாற்றம் நாற்றமாய் ஆக
ஒப்புரவாய் உழைக்கும்
உன்னத மனிதர்கள்…

இவர்களால்தான்
நம் எல்லா விடியல்களும் என்றும்
பெருமூச்சு விட முடிகின்றது…
ஏற்றத்தாழ்வு பார்க்கும்
நம் மனதை விட
ஏற்றத்திலும் தாழ்விலும்
இறங்கி பணி செய்யும்
இவர்களின் தரிசனம் நித்தமும்
நமக்கு கோபுர தரிசனமே… எனினும் கோடி புண்ணியம்
அவர்களுக்கானதே! – ம.சக்திவேலாயுதம், திருநெல்வேலி


கனவிலும் கண்டதில்லை
கடிதாய் ஒரு காலம்….
காற்றில் பரவும் அசுரனாய், கட்டுக்கடங்கா நோய்த்தொற்று…

வீதியில் நடமாட பயந்து,
வீட்டில் முடங்கிய மக்கள்..
ஊரே பயத்தில் உறைய,
உண்மையில் முன்நின்ற
உன்னத மக்கள்… துப்புரவு தொழிலாளர்!!

சற்றும் அஞ்சவில்லை..
சிறிதும் தளரவில்லை.. நோய்த்தொற்று பகுதிகளிலும்,
நேரம் காலம் பாராது பணியாற்றிய நேசமிகு காவலர்கள்!!!

மரணிக்கும் நோய் தொற்று
மனிதரை மண்ணில் புதைக்கும்
மகன்களாய் இம்மாமனிதர்..

தூய்மையாய் நகர் பேணி.. துணிவுடன்
களத்தில் நின்று.. துணைபுரியும் இவர்கள், – thuimai paniyalargal kavithai
துப்புரவு தொழிலாளரில்லை
தூய்மை தெய்வங்கள்!!! – தி.வள்ளி, திருநெல்வேலி


பகையண்டா வீரன்
காப்பானே ஆனால்
பிணியண்டா காப்பவன்
அஃகுதே ஆவான்..

குடி உயர கோலோச்சுவன்
மன்னன் ஆனானே ஆனால்
குடி சிறக்க துடைப்ப
கொலூன்றுபவன் அஃகுதே ஆவான்..

அன்புடனே அரவணைப்பவள்
அன்னை ஆவாளே ஆனால்
அரண் அமைத்து அவளைபோல்
அரவணைப்பனும் அஃகுதே ஆவான்..

தூய்மைக்கு இலக்கணம்
கோயில் ஆகுமே ஆனால்
இவன் நடக்கும் சாலையெங்கும்
அக்கோலம் ஆகுமே ஆகும். – அந்தியூரான் ஸ்ரீராம் பழனிசாமி


விரட்டும் பிணிகளை
துரத்தும்
இவரது கரங்கள்!

அசுத்தம் அகற்ற
அசராதென்றும்
இவரது மனங்கள்!

தூய்மை பேணிட
அழுக்காகும்
இவரது மெய்கள்!

அசந்து மறந்தும்
தவறாது
இவரது பணிகள்,
அன்றேல் புவிதனில்
நலமோடு
வாழ்ந்திடும் உயிர்கள்?!.

இறையின் தொழிலை
இசைந்து
செய்திடும் இவர்கள்,

மனித மாண்புயர்ந்து
மகிழ்ந்து கொண்டாட
வேண்டிய மாமனிதர்கள்..

என்றும் மதித்து
போற்றுவோம்
இவரது சேவைகள்,

வேற்றுமை அகற்றி உளமாற உணர்வோம்
இவரது தியாகங்கள். – கவி தேவிகா, தென்காசி

You may also like...

11 Responses

  1. அர்ஜுன் says:

    🙏🙏🙏🙏🙏🙏

  2. அர்ஜுன் says:

    தூள்

  3. பொய்யாமொழி says:

    தெய்வீகப் பணியின் சிறப்புகளை அழகாக கூறியுள்ளனர்.

  4. Sriram says:

    அருமை… என்னுடன் இணைந்து எழுதிய அனைவருக்கும் வாழ்த்துகள்

  5. Kavi devika says:

    வாழ்த்துகள் கவியின் கவிகளுக்கு….

  6. R. Brinda says:

    ஒவ்வொன்றும் மிக அருமையாக இருக்கிறது.

  7. நிர்மலா says:

    அருமை.

  8. Rajakumari says:

    துப்புரவு தொழிலாளர்கள் பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது.

  9. பாரிஸா அன்சாரி says:

    வள்ளல்களைப் போற்றி வந்த,என் புலவர் குழா(லா)ம்,நிலையுணர்ந்து, இம்மண்ணின் தியாக,
    பிள்ளைகளைப் பாடியது காணீர்!
    அக மகிழ்வு!

    சேவை செய்ய வந்திட்ட,இவர்தம்,
    தேவையை நாம் பூர்த்தி செய்திடுவோம்!

    எங்கிருந்தோ வந்தார்,
    …….சாதி நாம் என்றார்,
    ஈண்டிவரை யாம் பெறவே,
    என்ன தவம் செய்துவிட்டோம்!

    ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்,
    இவர் தன் தாய் மனம்-ஐயமில்லை!

    புராண பார்த்த சாரதி,
    கொரானா சாதனை ஊழியன்,
    இருவரும், முன் களப்பணியாளர்களே!
    பாரதம் வென்று தந்தான் அவன்!
    இவண், பாரதம் காத்து நின்றான்,இவன்!

    இதிகாச கடவுள்கள்,
    (மகேஷ், வேலாயுதம், ராம், வள்ளி, தேவிகா)
    ஒருங்கிணைந்தீந்த,
    பண்-தெள்ளு தமிழில் தேன் மாரி!

    உண்மை உணர்ந்ததற்கு நன்றி!
    கவி புனைந்ததற்கு நன்றி!!

  10. Kasthuri says:

    ஐந்து கவிதை வரிகளும் அருமை.. அனைவரும் சல்யூட் அடிக்க வேண்டிய நபர்கள் தான் தூய்மை பணியாளர்கள்

  11. ரஞ்சனி says:

    தூய்மை பணியாளர்கள்… இயற்கையை காக்கும் ஒரு முக்கிய கருவிகள்…. அவர்கள் இல்லாமல் யாராலும் சுத்தம் என்ற வார்த்தையை எளிதில் பயன்படுத்தி விட முடியாது…. தன்னலம் பாரா மனிதர்கள்…💐💐💐💐💐