அவுரி இலை – நீலி

அவுரி இலைகள் சாயம் ஏற்ற மட்டும் பயன்படகூடியதல்ல மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது .இயற்கையாக கிடைக்கும் மிக சிறந்த மலமிளக்கி . 18 வகை விஷங்களை நீக்கும் வல்லமை பெற்றது. ஆயுர்வேதத்தில் இதனை நீலி என்று சொல்வார்கள் .

arivu ilai neeli

கப வாத நோய்களை தீர்க்கும் ,விஷத்தை போக்கும் ,முடிக்கு நல்லது ,வயிற்று பூச்சிகளை கொல்லும்

உதரம் என்னும் வயிறு வீக்கம் ,வாதரக்தம் ,ஆமவாதம் ,குன்மம் ,ஜ்வரம்,மண்ணீரல் நோய்களை நீக்கும் .

அவுரி வேரை பசும் பாலில் கலந்து பருக உடல் எடை குறையும்.

அவுரி வேரை கழனி தண்ணீரில் இடித்து சாப்பிட எந்த விதமான பாம்பு கடியில் ஏற்படும் விஷமும் நீங்கி விடும் (ராஜ நிகண்டு).

பல்லில் உள்ள கிருமிக்கு -நீலியின் வேரை கடித்து துப்ப தீரும்

நீலி பிருங்காதி தைலம் ,நீலின்யாதி கிருதம் ,நீலிகாதி தைலம் போன்ற கடைகளில் கிடைக்ககூடிய மருந்துகளிலும் பயன்படுத்தபடுகிறது .

நல்ல பாம்பு விஷத்திற்கு எதிர் மருந்தாக செயல்படுகிறது இந்த அவரி சமூல சாறு

தீப்புண்,தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களை சரியாக்க இந்த அவுரி பயன் படும்

நாய்கடி விஷத்தால் ஏற்படும் -ஹைடிரோ போபியா க்கு நன்றாக குணம் கிடைக்க செய்யும்.

வெளுத்த முடிக்கு இயற்கையாக கருப்பாக்க (சிறந்த முடி சாயமேற்றியாக)இந்த நீலி பயன்படும்.

You may also like...