என் மின்மினி தொடர்கதை (பாகம் – 77)


முந்தைய பதிவை வாசிக்க
– சிறிய இடைவெளியென்றாலும் மீண்டு(ம்) வந்தது மின்மினி, தொடர்ந்து வாசித்து ஆதரவு தரும் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி !!… ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-77

en minmini kathai paagam serial

En minmini thodar kadhai

பொதுவாக இந்தமாதிரி மஞ்சள் குங்குமம் பூசப்பட்டிருக்கும் பொருட்கள் என்றாலே எனக்கு கொஞ்சம் மனசுல பயம் வரும்…இதை நீங்களே பிரிச்சு பாருங்களேன் டீச்சர் என்று சற்று தயங்கினான் பிரஜின்.
என்ன சொல்றீங்க அங்கிள்! இதுக்கெல்லம்மா பயம் வரும் உங்களுக்கு…என்கிட்டே கொடுங்க நான் பாக்குறேன்.அம்மா இருக்கும் போதே நான் அடிக்கடி இதை பிரிச்சு பாக்கணும்ன்னு ஆசை பட்டது உண்டு..ஆனால் அம்மா அதை பார்த்து அழும் போது எனக்கு வேற எதுவும் அவங்க கிட்டே கேட்கவும் தோன்றாது.அதை பிரிச்சு பார்க்க வேணும்ன்னு இருக்குற எண்ணமும் மறந்து போயிடும் என்றான் முகில்…

லேசான புன்னகையுடன் சரி சரி யாராச்சும் பிரிச்சு பாருங்க என்ன இருக்குன்னு பார்ப்போம் என்ற படி முகிலின் முதுகை தட்டி கொடுத்தாள் டீச்சர்…

சரிங்க டீச்சர் நானே பிரித்து பார்க்கிறேன் என்றபடி அந்த மூட்டையை பிரித்தான் பிரஜின்…

பிரஜின் அந்த மூட்டையை பிரித்து முடிக்கும் போதே முகிலின் கண்கள் அகல திறந்து லேசான கண்ணீர் துளிகளும் கண்களின் உள்ளே தேங்கி நின்று கொண்டிருந்தது…

அதை கவனித்த டீச்சர் ஒண்ணும் இல்லை முகில்.அம்மா,அப்பாவினுடைய கல்யாண ஃபோட்டோவும் உங்க அப்பா எழுதின டைரியும் தான் இருக்கு அந்த மூட்டையில் என்றாள்…

பார்த்தேன் டீச்சர்.டைரி பத்தி ஒண்ணும் எனக்கு தெரியல.ஆனா அப்பா முகம் கூட எனக்கு நியாபகம் இல்ல.அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.
அப்பா சாமிகிட்ட போயிட்டாங்க.இனி நீதான் நல்ல படிச்சு உன்னோட வாழ்க்கைய பாத்துக்கணும்.யாரும் வந்து கைய புடிச்சு நம்மள தூக்கி விட வர மாட்டாங்கன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க…என்றபடி வயசுக்கு மீறிய பக்குவம் வந்தது போல் பேசி அவனை அறியாமல் அழ ஆரம்பித்தான் முகில்…

டீச்சருக்கும்,பிரஜினுக்கும் அவனை பார்த்து இன்னும் மனம் கனக்க ஆரம்பித்தது…

என்ன சொல்லி அவனை தேற்றுவது என்று புரியாமல் அவனருகில் ஓடி சென்று நான் உனக்கு இனி இருக்கிறேன் தம்பி என்றபடி அவனை இறுக அணைத்து முத்தமிட்டான் பிரஜின்… – என் மின்மினி தொடர்கதை பாகம்-77

பதிலுக்கு அவனும் பிரஜினை சரிங்க அங்கிள் என்ற படி கண்ணீரை துடைத்தபடி அவனது அப்பா,அம்மாவின் போட்டோவை எடுத்து தனது பிஞ்சு விரல்களால் அவங்கள் முகங்கள் நன்கு தெரியும் படி துடைத்து அவர்கள் கன்னங்களில் முத்தம் கொடுத்துவிட்டு அந்த போட்டோவையே பார்த்து கொண்டு இருந்தான் முகில்…

டீச்சர் எனக்கு தெரிந்த நான் கொஞ்ச நாள் தங்கி இருந்து படிச்ச விடுதி ஒண்ணு எங்க ஊருல இருக்கு.இவனை அங்கே கூட்டிட்டு போயி அங்கேயே ஸ்கூல்ல சேர்த்து விடவா என்று பிரஜின் கேட்க ….

இல்லைப்பா… அவனுக்குன்னு இனி இங்க யாரும் இல்லை.தாத்தா பாட்டி எல்லாம் எங்க இருக்காங்க,எப்படி இருக்காங்கன்னு ஒண்ணும் தெரியல.நாளைக்கு ஏதாச்சும் பிரச்சனை என்றால் என்ன செய்வது.,அதான் ஒரே யோசனையாக இருக்கு தம்பி என்றாள் டீச்சர்…

ஒண்ணும் கவலைப்பட வேண்டாம் டீச்சர்.நான் உங்கள் கவனத்துலயே தான் இருப்பேன்…நீங்க முடிந்தால் ஒரு மாசத்துக்கு ஒரு முறையோ இல்லையெனில் உங்களுக்கு எப்போ நேரம் இருக்கிறதோ அப்போ வந்து முகிலை பார்த்துகிட்டு போகலாம் என்றான் பிரஜின்…

எதையோ யோசித்தது போல முடிவாக செரிங்க தம்பி.பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்றாள் டீச்சர்….

பாகம் 78ல் தொடரும்…

– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)

This image has an empty alt attribute; its file name is arjun-bharathi-a-mu-perumal-minmini.jpg

You may also like...