எனக்காக அவள் வடித்த கவிதை பாகம் – 1
என்னவள் வடித்த கவிதையைப் பற்றிய என் புலம்பல்கள்,
பெண்மையெனும் கவிதையை சித்தரிக்க
நான் எழுதிய வரிகளை கவிதை என்றார்கள் .
இங்கு பெண்மையே,
தன் கிறுக்கல்களை, உளறல்களை,,
எழுத்துக்களாய் படைத்தது..
அதை கவிதை என்று மட்டும் சொன்னால் போதுமா ?
இத்துனை நாள் உன்னை அழகுச் சிலையாக
எழுத்துக்களில் செதுக்கிய என்னைவிட ,
நீ உன் கவிதையில்
காட்டிய சொல்லதிகாரம் என் எழுத்துக்களையும்
வென்று விட்டது.
முன்பு எழுதப் பிறந்தவன் என்ற ஆணவம்
கொண்டிருந்தேன் ..
உன் எழுத்துக்களின் கட்டளை
என்னை ஆணவத்திடமிருந்து
விடுதலை செய்தது ……
இத்தனை முறை ரசித்தாயா என்னை ???
உன் கவிதையை சொல்லாமல் இருந்திருந்தால்
இன்றும் நான் காதல் குருடன் தானடி.
எத்தனையோ பிறவிகள் சேர்த்து வைத்த காதலை
உன் இந்த கவிதை சொல்லியதுபோல
என்னில் துடிக்கும் ஓர் உணர்வு ..
என்னைச் சூழ்ந்தத ஒளியின் பரவசம்,
எதோ உன் பார்வை நரம்புகளின்
பிரதிபலிப்போ என்று உரைக்கிறது என்
உள்ளத்து உணர்வுகள்.
– நீரோடைமகேஷ்
அருமை நண்பா
நன்றி நண்பரே
who telling to whom!!!!!!!!!!
நல்லாயிருக்கு மகேஷ்
நல்லாயிருக்கு மகேஷ்
நல்லாயிருக்கு மகேஷ்