இமைக்கா நொடிகள்

மன உளைச்சல் வாழ்க்கையில் பலரின் நிம்மதியான தூக்கத்தையும் கெடுத்துவிடுகிறது அதை பற்றி எழுத நினைத்துக் கொண்டிருந்த பொழுது சுஷந்ந் சிங்கின் மரணம் அதற்கு ஒரு வடிவம் கொடுத்துள்ளது… ~ மணிகண்டன் – imaikkaa nodigal kavithai

imaikkaa nodigal kavithai

படுக்கையில் தான் எத்தனை வகையோ..!
அத்தனையும் பரிசோதித்துப் பார்த்தாயிற்று..
இமைமூடி இருள் சூழ்ந்து வெகு நேரமாயிற்று..

விசு விசுனு அடிக்கும் குளிர்சாதன காற்றோ..
பார்த்து பார்த்து வாங்கிய பஞ்சு மெத்தை பெட்டோ..
ஆசை ஆசையாய் வாங்கி வடிவமைத்த அலங்கார விளக்கோ..
இறுக மூடிய கண்களோடு இழுத்துப் போர்த்தும் போர்வையோ..
தவிக்காத தேகத்தில் கூட பரவாயில்லை என குடிக்கும் ஒரு டம்ளர் தண்ணீரோ..
உறக்கத்திற்கு மட்டும் உயிர் கொடுக்கவே இல்லை…!

நடுநிசியை தாண்டி நாழியாவது நன்றாக தெரிகிறது..
ஆனால் அகவும் மயில் அழகாய் தெரியவில்லை..
கொக்கரிக்கும் சேவல் கொஞ்சலாய் தெரியவில்லை..
கீச்சிடும் குருவிகள் ரீங்காரமாய் தெரியவில்லை..
ஏன் என ஆராய்ந்து பார்ப்போமானால் அந்தக் கண்களில் உள்ள கண்ணீர் ஏராளம்…!

manathil eeram

அவை கனவை தொலைத்த கண்களாக இருக்கலாம்..
அவை காதலை வெறுத்த கண்களாக இருக்கலாம்..
அவை கடனில் மூழ்கிய கண்களாக இருக்கலாம்.. – imaikkaa nodigal kavithai
அவை கடந்த வாழ்வை நினைத்து கடக்க முடியாது கண்களாக இருக்கலாம்..
அவை வாழ்க்கை துணையை தேடும் கண்களாக இருக்கலாம்..
அவை கட்டியவரை நினைத்து கரையும் கண்களாக இருக்கலாம்..
அவை பிள்ளைகளை நினைத்து வாடும் கண்களாக இருக்கலாம்..

பாவம் நித்திரையில் கூட நிம்மதி இல்லை
இனி நிஜத்திலா நித்திரைக்க போகிறோம் என நிம்மதியாய்
இறுதியாக நித்திரைக்கும் பலருக்கு சமர்ப்பணம்…!

– மணிகண்டன் சுப்பிரமணியம், கோபிசெட்டிபாளையம்

You may also like...

7 Responses

  1. R. Brinda says:

    “இமைக்கா நொடிகள்” கவிதை யதார்த்தத்தை எடுத்துக் காட்டுகிறது. அருமை!! கவிஞருக்குப் பாராட்டுக்கள்!!💐💐💐

  2. Boobalan says:

    அவை கனவை தொலைத்த கண்களாக இருக்கலாம்..
    அவை காதலை வெறுத்த கண்களாக இருக்கலாம்..
    அவை கடனில் மூழ்கிய கண்களாக இருக்கலாம்.. – imaikkaa nodigal kavithai
    அவை கடந்த வாழ்வை நினைத்து கடக்க முடியாது கண்களாக இருக்கலாம்..
    அவை வாழ்க்கை துணையை தேடும் கண்களாக இருக்கலாம்..
    அவை கட்டியவரை நினைத்து கரையும் கண்களாக இருக்கலாம்..
    அவை பிள்ளைகளை நினைத்து வாடும் கண்களாக இருக்கலாம்

    👌👌👌👌✌✌

  3. NoOne says:

    White paper or white screen that doesn’t matter… When you start write something It’s always interesting to read… 🔥🔥🔥

  4. S. Rajakumari chennai says:

    மனம் கனக்கிறது நித்திரையை நினைத்து

  5. தி.வள்ளி says:

    இமை மூடா விழிகள் இரவின் வசம். சுமை நிரம்பிய இதயம் கவலையின் உச்சம். மன அழுத்தம் வாழ்வின் நஷ்டம். தவிர்ப்போம் அதனை.. இனி இந்நிலை எவர்க்கும் வேண்டாம் .

  6. Kavi devika says:

    மன அழுத்தத்தின் பாரம் இருவிழிகளால்
    சுமக்கவியலா துயரம்…..
    அருமை கவி. வாழ்த்துகள்.

  7. G. Poomani says:

    அருமையான பதிவு ! நட்பே வாழ்த்துக்கள்….