காதல் கவிதைகள் தொகுப்பு 1
Kaathal kavithai thoguppu
நினைவுகளில் நீங்காத ராகம் போல கனவுகளும் காதலுமாய் நிஜங்களை வரிகளாக்கி காதல் சொல்லும் கவிதைகளின் தொகுப்பு. வெறும் பார்வைகளால் கவர்ந்து இழுத்து மனதை வேரோடு பெயர்த்தெடுத்து சென்ற தேவதையை சித்தரிக்கும் வரிகளை எழுதியது நீரோடை மகேஷ் Kaathal kavithai thoguppu
மகேஷ்கண்ணா
தினம் தினம் நூறு கவிதைகள்
உன்னால் உனக்காக .
உன்னிடம் அதை காட்ட?
உன் மனம் காயப்படக்கூடாது
என்ற பயம்,
என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் ,
அதனால் இந்த வரைவலையில் விட்டு
செல்கிறேன்.
தித்திக்கும்
வரும் கண்ணீர் கூட
கரும்பைப் போல தித்திக்கும் !!
ஏன் என்றால் நினைவில்
நீ இருப்பதால் …….
Unnai Ninaiththu Azhumpodhu
கவிதையைத் தேடி ஒரு பயணம்
என் தேவதையால் தொலைந்து போன
வார்த்தைகளை தேடி கனவில் கால்
பதிக்கிறேன்.
கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்
இதோ வந்துவிடுகிறேன் .
கவிதையைத் தேடி ஒரு பயணத்தில்.
En Thevathaiyaal Tholaindhu Pona
என் முழுநிலவுக்காக
தினம் தினம்
தேய்பிறையாகும் என் நினைவுகள்.
நான் நினைப்பது
தொடர்ந்து கொண்டே இருக்கும்.
Mugam Theriyatha Muzhunilavukkaga !!!
கனவில்
கனவில் வந்த வானவில்.
தினம் தினம் கனவை அலங்கரித்தால்
அது என் காதல் தேவதையே உன்
கால்தடம் .இரவையும் நேசிக்கிறேன் கனவில் நீ
வருவதால்.
அவள் கண்கள்
ஆனால்
அவள் விழிகள் மட்டும் என் கண்களையே
கவர்ந்து விட்டதே .பார்வை படும் தூரமெல்லாம்
அவள் பிம்பமாய் !
Aval Kankal
இடக்கண்ணில் தூசிவிழுந்தால்
வலக்கண்ணும் அழுவதேன்?
நீ
தூசி தாங்கும் இடக்கண்ணா
எனக்கென அழும் வலக்கண்ணா
இல்லை வேடிக்கை பார்க்கும்
அந்த மூன்றாவது நபரின் கண்களா?
Idakkannil thoosi vizhunthaal
valakkannum azhuvathen?
nee thoosi thaangum idakkanna
enakkena azhum valakkanna?
illai vedikkai paarkkum antha moondraavathu
nabarin kangalaa?
நைஸ் போஸ்ட்