கருவூரார் சித்தர்
பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “கருவூரார் சித்தர்” வாழ்வும் ரகசியமும் பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – karuvurar siddhar
கருவூரார் சித்தர் வாழ்வும் ரகசியமும்
சிவலிங்கத்தை தழுகிய நிலையில் ஈசனோடு ஐக்கியமானவர் கருவூரார் சித்தர். அன்பு பூண்ட சித்தர்களிடம், முனிவர்களிடம் இளமையிலேயே ஞானப்பால் உண்டவர். “கருவூராருக்கு கருவான ஞானப்பால் அழித்தபோதே “என்ற அகத்தியர்12000 விரிவாக கூறுகிறது .இந்திய ஞானியர் வரிசையில் கருவூரார் சித்தருக்கு சிறப்பிடம் உண்டு. சித்தர் என்ற சொல்லுக்கு சித்தத்தை வசப்படுத்தியவர் என்ற பொருளும் உண்டு. புறக்கருவிகள் ஆகிய ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்களை போகிறபோக்கில் போகவிடாமல் உள்ளிழுத்து அகக்கருவியாகிய சித்தத்தினைசமாதியில் இறுத்தி வெற்றி பெற்ற அட்டமா சித்தி பெற்ற சித்தர் கருவூரார். காயசித்தி,மாயசித்திஅதிகம் நிறைந்த மாமுனியாக திகழ்ந்தவர்.
இவர் தாந்திரீகத்தில் தத்துவமும் மாந்திரீகத்தின் மகிமையும் கருவூரார் சித்தர் திறம்பட அளிக்கப்பட்டுள்ளது .அறியாத பரம்பொருளை நோக்கி அந்த உணர்வில் ஒன்று இருப்பவர்களுக்கு அமரநிலை அமையும் என்பது சித்தர் அனுபவமாகும் .பதினெண் சித்தர் நூல் வரிசையில் கருவூர் சித்தரின் வாழ்வும் ரகசியமும் பற்றி இப்பதிவில் காண்போம்.
கருவூர் சித்தர் வாழ்க்கை தடயங்கள்
கருவூராரின் தாய் தந்தையார் ஊர் ஊராகச் சென்று ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொண்டு வாழ்ந்தார்கள். அதனால் கிடைத்த பொருள் கொண்ட முனிவர்களுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். கருவூரார் கன்னார வகுப்பைச் சேர்ந்தவர். அதாவது செம்பு பித்தளை உலோகங்களை கொண்டு தொழில் செய்யும் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் போகரின் சீடர் என்றும் அகத்தியர் 12000
என்னும் பெருநூல் காவியம் கூறுகிறது. சிறிய வயதிலேயே மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்து சித்தராக மாறியவர் கருவூரார் .
வசியம், மோகனம், தம்பனம் உச்சாடனம் ஆக்ருசணம் , பேதனம், மாரணம் எனும் அட்டகர்ம மந்திரங்கள் கருவூர்சித்தர் அத்துப்படி ஆயிற்று. ஒருநாள் கருவூரார் .முன் ஒரு காகம் தன் காலில் கவ்வியிருந்த ஒரு ஓலையை வைத்தது கருவூரார் ஆச்சரியத்துடன் அந்த உரையை வாசித்தார் கருவூராரை நீர்
உடனே தன்னை வந்து சேரும் என்று இருந்த அந்த ஓலையில் அந்த ஓலையை அவரது குருவான போகர் தான் எழுதி இருந்தார். தஞ்சையை ஆண்ட இராஜராஜ சோழ மன்னனுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டிருந்தது அதனைப் போக்கவே அவரை அழைத்து இருந்தார் -karuvurar siddhar .
தஞ்சையில் சோழ மன்னன் ஒரு பிரம்மாண்டமான சிவாலயம் கட்டுகிறான் அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த அந்த ஆலயத்தில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் செய்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முயன்று பந்தனம் செய்ய முடியாமல் கட்ட வழிந்து கொண்டே இருந்தது . சோழ மன்னனுக்கு இதற்கான காரணம் புரியவில்லை .இந்த குறை நிற்கவே கருவூரார் அழைக்கப்பட்டிருந்தார்.
கோவிலுக்குள் நுழைந்த கருவூரார் சிவலிங்கத்தின் அருகில் சென்று பார்த்தபோது அங்கு அஷ்டபந்தனம் செய்ய விடாமல் ஒரு பிரம்மராட்சசி தடுத்துக் கொண்டு இருப்பதைக் கண்டதும் மந்திர உச்சாடனம் செய்து அதன் மீது காறி உமிழ்ந்தார் .கருவூராரின் வாயில் எச்சில் படுத்தி பொசுங்கி கருகியது போல் அந்த பிரம்ம ராட்சசி கருகியது. அதன் பிறகு அவர் அஷ்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிஷ்டையும் அபிஷேகம் செய்து வைத்தார் .அப்போது கருவூரார் அண்ட ரண்ட மந்திரத்தை உபதேசித்தார். சிவபெருமானின் ஐந்து முகமாகவே ஈசானம் தத்புருஷம் அகோரம் வாமதேவம் சத்தியோசாதம் என்பதை அகோரம் எனப்படுவது தான் அண்டரண்டம் .அந்த மந்திரத்தை உத்தமர் தவிர மற்றவர்களுக்கு உழனைக்காதை என்றார். இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றும் இம்மந்திரம் என்றார்.
மரணம் என்ற திரைக்குப் பின்னே
மரணத்திற்கு முந்தைய மனித வாழ்க்கை எப்படி திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கிறது அதுபோல மரணத்திற்குப் பின்னால் கர்ம வினைகளுக்கு ஏற்ப நரக வாழ்க்கையும் வகைவகையாய் படுத்தப்பட்டு இருப்பதாக அபிதான சிந்தாமணியில் கூறப்படுகிறது .இவ்வுலகம் போற்ற எழுந்திருப்பது உடல் மீதுள்ள உரரோமமே உயிர்பிக்கும் என்று நெஞ்சு நிமிர்த்தி பாடியுள்ளார்.
வள்ளலார் தனது உயிர் போனாலும் உடனே உடலை விட்டுப் போகாமல் உயிரற்ற உடலையும் வீக்கம் வழியாக வெளியேறும் சக்தி உடையது உயிர் போகாது என்று கூறப்படுவதால் இது நாள் வரை தங்கி இருக்கும் தனஞ்சயன் வாயுவில் பிராண வாயுவை உண்டாக்கும் அந்தர்யாமி என்ற குறைபாடு இருப்பதால் அதன் வாயிலாக பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று எழும் சாத்தியமான காரியம் என்று கூறும் சித்தர்கள் .இதன் காரணமாகவே இறந்த உடலை சமாதி செய்ய வற்புறுத்துகின்றனர் மனித வாழ்க்கையினை நெறி முறைப்படுத்தி வாழ்க்கையில் பயனும் பற்றும் ஏற்படுத்த யோகக் கலையினை அர்ப்பணித்தனர்.
சித்தர்கள் அறிவை அறிவால் அறிந்து புலன்களை வென்று மனதை மேல் நிலைக்குக் கொண்டு செல்ல சிந்தித்த சித்தர்கள் மந்திர தந்திரங்களை வித்தியாசம் செய்துள்ளனர் அஷ்டகர்மம். இவற்றை பயிலும்போதும், மேற்கொள்வதிலும் அறிமுகம் தேவை என்று அறிந்தே மறைவாக வைத்துள்ளனர் மறைவாக வைக்கப்பட்டுள்ள .எனவே மறை எனஅவை அனைத்தும் எனக்கொள்ளலாம்.
கருவூர் சித்தர் எழுதிய நூல்கள்
வாத காவியம், வைத்தியம் யோகம் ஞானம், பல திரட்டு, குருநூல் சூத்திரம், மெய்ச் சுருக்கம், கற்பவிதி முப்பு சூத்திரம், நொண்டி நாடகம், மூலிகை தைலம், விபரம் கர்ப்ப கூறு, அட்டமாசித்தி என்னும் இதுபோன்ற பல பாடல்களையும் நூல்களையும் இயற்றியுள்ளார் கருவூரார் – karuvurar siddhar.
எதையும் மனமொன்றி செய்ய வேண்டும்
கருவூர்சித்தர் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்த காரணமாயிருந்தார். கற்ப மூலிகைகளைப் பற்றி அநேக பாடல்களை பாடியுள்ளார். கருவூரார் சித்தர் கடைசியாக மீண்டும் தான் பிறந்த ஊராகிய கருவூர் வந்து சேர்ந்து அங்கிருந்து வேதியர் பழம் பகை காரணமாக மன்னனிடம் சென்று முறையிட்டனர் . குற்றமில்லாத என்பதை உணர்ந்த மன்னர் கோபி கொன்றுவிட தீர்மானிக்கப்பட்டன. கருவூர்சித்தர் இறைவன் சித்தம் என்ன என்பதை உணர்ந்து பயந்தவர் போல கோயிலை நோக்கி ஓடினார்கள் துரத்தினர் கருவூரார் ஓடிப்போய் சிவலிங்கத்தை தழுவிக்கொள்ள இறைவன் அவரை தம்மோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
பலர் மனம் ஒன்றாமல் தொழிலைச் செய்வார் மனத்தை நிலைப்படுத்த தெரியாமல் பல நூல் படித்து புத்தி சித்தம் முதலானவற்றையும் ஒரு நிலையில் நிறுத்தி வாசியோகம் புரியத் துவங்கும் ஐம்பொறிகளும் அடங்க அந்த காரணங்கள் அருளும் போகும் என்கிறார் கருவூரார் சித்தர் மனதை அடக்குவது அவ்வளவு எளிதான செயலன்று அடக்க முயலும் போது கோடி மின்னல் முழங்கும் கண்கள் மூடப்பட்டு இருத்தல் வேண்டும் அடங்காத பூதம் தோன்றும் சிங் என்ற சொல்லை கூறி வனத்தின் நடுவே நிறுத்தி நோக்கமெல்லாம் சத்தமும் போய்விடும் போல மயங்காமல் மௌனத்தில் நிற்க்க வேண்டும் . கண்களை திறக்காமல் கருத்தினை அறியலாம் என்று மனம் பற்றிய கருத்தினை கருவூரார் வெளிப்படுத்துகிறார்…
சித்தரின் சிறப்பை சொல்ல வார்த்தைகள் போதாது போலும்…..
பயனுள்ள தகவல்
கோடி மின்னல் முழங்கும் போதும் கண்கள் மூடி இருக்க வேண்டும் என மனம் ஒன்று பட கூறிய கருத்து மிகை இல்லாதது.
கருவூர் சித்தர் பற்றிய பல செய்திகளைத் தெரிந்து கொண்டோம்! நன்றிகள் பல.