கவிதை தொகுப்பு 69
by Neerodai Mahes · Published · Updated
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக முதுகலைத் தமிழாசிரியர் மற்றும் கவிஞர் சே.சண்முகவேல் அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம்.
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் பாலகிருத்திகா அவர்களை அறிமுகம் செய்கிறோம்.
நாணயம் நாவில் வேண்டும்
நல்ல செயலில் வேண்டும்
சிதறும் சில்லரையில் இல்லை
சிந்தனையில் வேண்டும் நாணயம்
பாலகிருத்திகா மாரியப்பன்
நீயே நினைவுகளாய், கனவுகளாய் மாறினாய்
காற்றாய் கரைந்து நினைவுகளால் சுடுகிறாய்
இருக்கும் வரை தீஞ்சுவையாய் இனித்தாய்
இறந்தும் வாழ்கிறாய் இதயத்தில் நிறைவாய்
சுடாமல் சுடுகிறாய், நினைவுகள் சுடுகிறது
இனிய நினைவே, இல்லாத கனவே!!!
பாலகிருத்திகா மாரியப்பன்
உலகம் எமக்கிட்ட பெயர்
ஆம் , ஆகச்சிறந்த உண்மை.
எதையும், எப்படியும், எதற்காகவும் , எந்த சூழ்நிலையிலும் எங்களை மற்றவர்களுக்காக மாற்றிக் கொண்டு வாழப் பழகிய திறனாளிகள்
ஏளனப் பார்வைகளோ, பேச்சுகளோ எங்களை சுட்டாலும் சுயம் மறவாது சாதிக்கப் பிறந்தவர்கள்
எதில் இல்லை எங்கள் ஆளுமை????
ஆளுமைக்கே ஆளக் கற்றுக் கொடுக்கும் திறன் உண்டு எங்கள் வசம்
“என்ன தவம் செய்தனை” என பாரும், ஊரும், எம்மை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஈன்ற பெற்றோர்கள் பெருமிதம் கொள்ள சாதனை படைத்த மாற்றம் கண்ட திறனாளிகள் யாம்
எங்கள் உரிமைகளுக்கு எங்கள் கூட்டத்தினர் மட்டுமே குரல் கொடுத்து பெறுகிறோம் ஏட்டளவில் சிலவற்றை!!!!
எங்கள் ஆசைகள் பல வானவில்( மாயவரிசை) கனவுகள் தாம் என்றுமே!!!
வாழ்க்கை சக்கரத்தை உருட்டுகிறோம் எங்கள் சக்கர நாற்காலி காதலர்/ காதலிகளுடன்
ஏன் பிறந்தோம் என்ற கட்டத்தை தாண்டி, சாதிக்க பிறந்தோம் என்று உலகம் மெச்ச சாதித்தே விட்டோம் பல துறைகளில்
இனியும் வீழமாட்டோம், எங்கள் சுயத்தை இழக்காமல் எம் சக தோழமைகளையும் கைபிடித்து மேற் சென்று பிரபஞ்சத்திற்கு முன் மாதிரியாக வாழ்ந்தே விடுவோம் என்ற நம்பிக்கையுடன்
பாலகிருத்திகா மாரியப்பன்
மன்றல் வேண்டிய தூது..!
ஈ லோகமும் பிரகாசமாய் அருளும் ஆறுமுகனே..
இந்த இளசுகளையும் கொஞ்சம் கவனிப்பாயா..!
இளசுகள் என்று சொல்லக் கூட மெல்ல தயக்கம் தான்..!
ஏனெனில் வல்லு வளசல்கள் என்பதை தாண்டிய வயசாச்சே..!
உறவு முறைகளில் புதிய பொறுப்பு ஆவதற்கு இனி ஒன்றுமில்லை அத்தனையும் ஆயிற்று..!
மலை மலையாய் ஏறியுமாச்சு..
கடல்நீரினில் மூழ்கியும் பார்த்தாச்சு..
ஜாதகம் எல்லாம் சாதகம் ஆகும் என்ற சமாதானம் மட்டும் வேண்டாமே..!
வலைதளமோ நேர் வரனோ..
வாழ்க்கையை தேடி தருவதாய் தெரியவில்லை..!
சிவனின் சிலுவையோ புத்தரின் குல்லாவோ போட்டுக் கொள்ள தயார் தான்..
ஆனாலும் சில சமயம் போதி மரம் அழைப்பதாய் ஓர் உணர்வு இந்த பாதி மரத்தை..!
மாமன் பொண்ணோ மத்த பொண்ணோ..
எங்கே போனார்கள் என்று தேடிய வேலையில்,
தேடியே வந்தார்கள் பத்திரிகையோடு..!
வாய்ப்புகளை தவறவிட்டதில் பெரும் பங்கு உண்டு தான்..
அந்த பெரும் பங்கின் விலை அறியாத வயதினிலே..!
உனக்கு ஆனால் தெரியும் என்பார்கள்,
புலிக்கு புல் ஆகாதென்று யாரய்யா சொன்னார்கள்..!?
பாவம் பார்த்து பதில் தூது அனுப்பு காத்திருக்கிறோம் வழக்கம் போல்..!
– மணிகண்டன் கோபி