பொது கவிதைகள் தொகுப்பு – 3
புதிய வளரும் கவிஞர் அவிநாசி பிரகாசு அவர்களின் கவிதை தொகுப்பு இதோ, – pothu kavithai
மழழையின் சிரிப்பென்று
நீ கருவாகி கருவறை புகுந்தபோதே
உனக்கும் எனக்குமான புதிய உறவு உருவானது…
கருவே உறுவாகி இப்பூமியை முதன்முறை பார்த்தபொழுது
அவ்வுறவு நிலையானது…
உன் பொற்கைகள்
இப்பூமி தொட்டுத்தவழும் போது இப்பூமியும் உன்னுடன் தவழ்ந்ததோ…
முதலடி வைத்து நடக்கும் போது இவ்வையகமும் சேர்ந்து உன்னுடன் நடந்ததோ…
புன்னகையும் தான் சிந்தித்தது உன் சிரிப்பு
“மழழையின் சிரிப்பென்று”!!!
அமைதியின் சிகரம்!! இயற்கையின் பிரமாண்டம்!!
நான் கண்ட அனுபவங்களை இலக்கணத்தோடு வரியாக்குகின்றேன்…
கார்மேகங்கள் போல
காட்சியளிக்கும் மணல் மேடுகள்,
விண்மீன்கள் போல கூட்டமாக
இருக்கும் ஒட்டகங்கள்,
மணலில் கால் பதித்த ஒட்டகத்தின்
கால் தடங்கள்,
தண்ணிர் இல்லா இடத்தில் பால் கொடுக்கும்
சப்பாத்திக்கள்ளி செடிகள்,
சூரியனின் கோபப்பார்வை மட்டும் ஏனே
என் மீது வீச.,
மணல் சூடு என் காலை வருட.
பாலை வனத்திலிருந்து வெளியேறினேன்
மணல் வருடிய நினைவுகளுடன்!!!!
உன் அடிமை pothu kavithai
பச்சை வண்ண புல்வெளி போல இருந்த உன் உடை..,
அதில் அழகாய் பளிச்சிடும் உன் முகம்…
வானத்தை சுருட்டி தரித்த உடை.,
அதில் விண்மீன்களை எடுத்து வைத்தது போல
உடையின் சரிகைகள்…
அதில்
நிலவை போல உன் முகம்.,
மொத்தத்தில் பூமியில் நீ வாழ்வது போல
உன் இதயக் கூட்டில் வாழும் உன் அடிமை!!!
– பிரகாசு.கி அவனாசி
ஒவ்வொன்றும் மிக அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள் நண்பரே தொடரட்டும் உங்கள் பணி வித்தியாசமான முறை யில் வடிவமைக்கப்பட்ட கவிதை
சில வரிகளை எல்லாம் காணும் போது நிறைய வளர்ந்தே விட்டாரோ என்ற ஒரு ஐயம்..! வாழ்த்துக்கள் புதிய கவி…
மழை கவிதை மிக அருமை மற்றவை அனைத்தும் நன்றாக இருந்தது
மிக அருமை 👌
கவிஞர் பிரகாசு அவர்களின் கவிதைகள் அருமை.பாலைவன வெம்மையில் பாதங்கள் சுடுகின்றது. பாவையின் ஆடை வர்ணனையில் மனம் பரவசப்படுகிறது. வாழ்த்துக்கள் கவிஞரே!!
அனைத்து கவிதைகளும் அருமை
Nice start!! keep continue and do much more
மிகவும் அருமையாக உள்ளது.
Valthukal anna anaithum miga sirapaga ullana.
கவிஞரின் வரிகள் அருமை.நல்ல சிந்னை.பாராட்டுகள்
அருமையான கவிதைகள்..அதில் ரரசித்த வரிகள்
மணல் வருடிய நினைவுகள்..
பலமுறை வாசித்தேன்
வானத்தை சுருட்டி தைத்த உடையை..
பொது கவிதை தொகுப்பு கவிதை எல்லாமே அருமை. அதில் “உன் இதயக் கூட்டில் வாழும் உன் அடிமை” என்ற கவிதை வரி மயிலிறகால் வருடியது போல இருந்தது. பாராட்டுக்கள்.