பொது கவிதைகள் தொகுப்பு – 8
கவிஞர் கவி தேவிகா அவர்களின் “வற்றாத வறுமை”, கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “நினைவு அவளானது” மற்றும் கவிஞர், கதாசிரியர் என பன்முகம் கொண்ட தி.வள்ளி அவர்களின் “வானவில் வாழ்க்கை” – pothu kavithaigal thoguppu 8
வற்றாத வறுமை
அழுது அடம்பிடித்த
குழந்தையை
அடித்தும் அடிபட்டும்
ஓய்ந்தன…..
துயரத்தாயவள் கரங்களும்
புலம்பலும்……
விழிகள் வடித்த
சுடுநீரை ஒற்றிய
பிஞ்சு விரல்களில்
ஒத்தடம் தந்தாள்
வறண்ட இதழ்களால்…..
இதயம் நிறைந்தது
அன்பினால்…..
வயிறும் நிறைந்தது
பசியினால்….. – pothu kavithaigal thoguppu 8
விழிநீர் வற்றினாலும்
வறுமை செழிக்கிறதே…
– கவி தேவிகா
நினைவு அவளானது
இமை தூங்காது
பார்வைச் சிறையில்
நினைவு பெட்டகம்
ஆரவாரிக்கும் ஒலியில்
உலர்ந்த பட்டாம்பூச்சியாய்
நினைவுச் சாடலோடு
வீழ்ந்து கிடக்கிறது உடல்
எண்திக்கும் ஒளியெழுப்பி
மீட்க முயலும் கதிர்களுக்கிடையே
கருப்பு வண்ண நிலவாக
உன் பின் அலைகிறது ஆன்மா
ஓய்விலும் உன் நினைவு
– பொய்யாமொழி.பொ, தருமபுரி
வானவில் வாழ்க்கை
அர்ஜுனன் தொலைத்த வில்லோ?
ஆண்டவன் தோட்டத்துப் பூவோ?
வானமகள் ஆடை வர்ணமோ?
வருவதே ஓர் அழகோ….
தோன்றுவதும் தெரிவதில்லை… மறைவதும் அறிவதில்லை…
எத்தனை நிறங்கள்!! எத்தனை அழகு!! அத்தனையும் அற்புதம்
ஆண்டவன் படைப்பில்…
வாழ்வதும் எளிதாம்
வானவில்லாய் வளைந்தால்…
எத்தனை மனங்கள்!!
எத்தனை குணங்கள்!!
அத்தனையும் அழகு
ஆண்டவன் படைப்பில்!!
தோற்றமும் அறிவதில்லை, மறைவதும் தெரிவதில்லை,
இடையில் வாழும் வாழ்வில்,
ஏன் இந்த மயக்கம்?ஏன் இந்த குழப்பம்
மன மயக்கத்தை விடுப்போம்!!
சக மனங்களை மதிப்போம்!! வானவில் போலவே,
வாழ்வினையும் இரசிப்போம்!!!
– தி.வள்ளி, திருநெல்வேலி
கவிஞர் களுக்கு வாழ்த்துகள்
இடம்பெற்ற கவிதைகள் அருமை. வாசித்தோருக்கு நன்றி.
வற்றாத வறுமை நெஞ்சை இருக்கும் வரிகள்😔😔😔😔
இளமையில் வறுமையை எழுதி கலங்க செய்துவிட்டார் தேவிகா..
காதலியின் நினைவில் எப்பொழுதும் தான் வீழ்ந்த பிறகும் நிழலாய் தொடர்வேன் என மிக அருமையாக பொய்யாமொழி எழுதியது சிறப்பு..
வாழ்க்கையை வானவில் உடன் ஒப்பிட்டு வளைந்து கொடுத்து(விட்டுக்கொடுத்து) வாழ்வதின் சிறப்பை அழகாக எழுதியுள்ளார் வள்ளி…மூவருக்கும் வாழ்த்துகள்… வாழிய நலமுடன்…
கவிதை மூன்றும் முக்கனி சுவைகள்
கவிதைகள் நன்றாக இருக்கிறது
அனைத்து கவிதைகளும் அருமையாக இருந்தது… அனைவரையும் பாராட்டுக்கு உரியவர்கள்
அருமை. அருமை. கவிகள். பாராட்டுகள்.
உணர்வுபூர்வமாய் இருந்தன.