வார ராசிபலன் வைகாசி 16 – வைகாசி 22
வைகாசி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal may-30 to june-05.
மேஷம் (Aries):
இந்த வாரம் சூரியபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு அதிகரிக்கும். அலைச்சல் அதிகமாக எதிர்கொள்வீர்கள். எதிலும் நிதானமாக செயல்படவும். பணியாளர்கள் பணியில் முழு கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தவும். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.
ரிஷபம் (Taurus):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். உங்கள் மனதில் கவலைகள் இருந்து வரும். செலவுகள் சற்று அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும். அதிக கோபம் வரலாம் கவனம் தேவை. பணியாளர்கள் வரவு செலவை சரியாக வைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் முழு முயற்சி செய்ய வேண்டும். விவசாயிகள் சிரமத்தை எதிர்கொள்வார்கள்
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
மிதுனம் (GEMINI):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். உங்கள் மனதில் நல்ல ஆற்றல் பிறக்கும். எடுத்த முயற்சிகள் வெற்றியடையும். உறவினர் வருகை நன்மை பயக்கும், வீண் செலவுகள் வரலாம். பணியாளர்களுக்கு அதிக வேலை இருக்கலாம். வியாபாரிகள் தடுமாற்றம் அடைவார்கள். கலைஞர்கள் உச்சம் பெறுவார்கள். மாணவர்கள் முழு முயற்சி செய்ய வேண்டும். விவசாயத்தில் குடும்பத் தேவை பூர்த்தி அடையும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.
கடகம் (Cancer):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராகவே காணப்படும். சொன்னதை செய்து முடிப்பீர்கள். யாரிடமும் வீண் பேச்சு வேண்டாம். அண்டை வீட்டார் மத்தியில் பகை உருவாகும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் முயற்சி பலன் அளிக்கும். விவசாயம் நடுத்தரமாக அமையும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.
சிம்மம் (LEO):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும். மனதில் நிம்மதி கிடைக்கும். உங்கள் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கலைஞர்கள் ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். மாணவர்கள் வெற்றி அடைவார்கள். விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
கன்னி (Virgo):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். நீங்கள் நினைத்தது நடக்கும், உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும், வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடுமையான உழைப்பு சந்திக்க நேரிடும். பணியாளர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயம் லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: லட்சுமி வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது.
துலாம் (Libra):
இந்தவாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். புதிய நண்பர்கள் இணைவார்கள். மனதில் குழப்பங்கள் வரலாம். பணியாளர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் அடைவார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் லாபம் அடையும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.
விருச்சிகம் (Scorpio):
இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். ஆடம்பர வாழ்க்கை எதிர்பார்ப்பீர்கள். பணவரவு உயரும். குழப்பங்கள் வரலாம். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பணியாளர்கள் திறமையாக செயல்படுவார்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் சுமாரான வருவாய் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்து வரவும்.
தனுசு (Sagittarius):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு திருப்தி அளிக்கும், நல்ல நண்பர்கள் இணைவார்கள், ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பணியாளர்கள் நன்மை அடைவார்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் பாராட்டுகளை பெறுவார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.
மகரம் (Capricorn):`
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பிறருக்கு உதவி செய்வீர்கள். வீண் அலைச்சல் இருக்கும். பணியாளர்கள் நல்ல எதிர்பார்ப்புடன் இருப்பீர்கள். வியாபாரத்தில் கடன் பிரச்சனை இருக்காது. கலைஞர்கள் சிரமம் அடைவார்கள். மாணவர்கள் நன்கு போற்றப்படுவார்கள். விவசாயத்தில் குடும்ப தேவைகளை பூர்த்தி அடையும்.
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
கும்பம் (Aquarius):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். எதையும் திறமையாக முடிப்பீர்கள். தாய் உடல் நலத்தில் சற்று கவனம் தேவை, புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். உங்கள் ஆயுள் பலம் நீடிக்கும். பணியாளர்கள் ஆடம்பர செலவுகளை தவிர்த்து செயல்படவும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் பொறுமையாக காணப்படுவார்கள். மாணவர்கள் புதிய யுக்தியை கையாள்வார்கள். விவசாயத்தில் வருமானம் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
மீனம் (Pisces):
இந்த வாரம் ராகு பகவான் நன்மையே செய்வார். தடைபட்ட காரியம் செயல்பாட்டுக்கு வரும். புதிய நண்பர்கள் இணைவார்கள். பொருளாதார வளம் மேம்படும். சுப செலவுகள் அதிகரிக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரம் மந்த நிலையே காணப்படும். கலைஞர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும். மாணவர்கள் 100 சதம் வெற்றியை அடைவார்கள். விவசாயத்தில் லாப நஷ்டங்கள் மாறி மாறி வரும்.பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும் – rasi-palangal may-30 to june-05.
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)