சகுனம் இன்னும் ஒழியவில்லை
கிரகங்களை ஆட்டிப்படைக்கும் கணிபொறி காலத்திலும் ..
வெறும் வேதிப் பொருள்களால் ஒரு உயிரை உருவாக்கும் வல்லமை வந்துவிட்ட இந்த அறிவியல் உலகத்திலும் . சில மனிதர்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விசக்கிருமியைப் பற்றியதுதான் இந்த கவிதை ….
சகுனம்
வெள்ளை தேவதை வீதி உலா !
சகுனம் என்கிறார்கள் மூடக் கடலில்
முடங்கிக்கிடக்கும் முட்டாள்கள்
அந்த வெள்ளை தேவதை வானவில்லாய்
மாறினாலும் வேறு (சி) பட்டம் சிலநேரங்களில் .கால்கள் தவறி பல்லி விழுந்தாலும்
கால்களே இல்லாதவன் எதிரே வந்தாலும்
கால்கள் இருந்தும் ஊனப்பட்ட இதயங்களின்
பார்வையில் அது சகுனம் .
காலையில் கரையும் காகம் தான்
விருந்தாளிகளின் முன்தகவல் (தகவல் களஞ்சியம்)
முழங்கால் முட்டிக்கும் முடிச்சு
போடும் இந்த மூடர்களின் நம்பிக்கை.
விளக்கை சுற்றி வட்டமிடும்
விட்டில்பூசிகலாய் உள்ள
இந்த மூடர்களின் நம்பிக்கை, அதில்
மூழ்கி மறைவது எப்போது ? ? ?
குழந்தைக்காக காத்திருப்பில்
மங்கைக்கு மலடி பட்டம் .
சாகசத்தின் உச்சியில் பெண்கள் இருந்தாலும்
சில இடங்களில் (இல்லை இல்லை )
பல இடங்களில் வழக்கமாய்
இந்த சகுனம் என்ற விசக்கிருமி இன்னும்.
– நீரோடைமகேஷ் April 2010
நல்ல கவிதை. மன்னிக்கவும் நான் இந்த கவிதை படித்த நேரம் எமகண்டம் ஆதலால் கருத்துரை வழங்க யோசிக்கிறேன்.
nice Kavithai,
Keep it up and all the best..
nice kavithai anna,
Very general thing but that is the real fact
All the best for ur feature