நிலாக்கவிதை
கற்பனையில் சங்கமித்து கனவுகளில் மட்டும் கரம் பற்றி நடந்து காலமெல்லாம் கனியாத காதல் நிலவை தினம் தினம் எழுத்துக்களில் சந்தித்த தருணம் satrumun nila kavithai.
சற்றுமுன்! நிலக்கவிதை
மின்சாரம் சற்று ஓய்வு எடுக்க சென்ற நேரம்,வீட்டு முன் நாற்காலியில் சாய்ந்த படி
வானத்தை பார்பார்த்தபடி என் பார்வை அந்த நிலவில்
என் முகம் பார்க்கவே காத்திருந்தவளைப் போல
நிலா முகம் ஆசை முகமாய்.
அவள் வெளிச்சத்தில் தெரிந்த என் முகத்தையே ரசித்தபடி.
இருந்தவளாய் தென்பட்டாள்.
நிலவுடன் தொடர்ந்த இந்த உரையாடல்
நீண்டு கொண்டே போக !
கற்பனை ஊர்தியில் அவளைப் சந்திக்க
மனம் புறப்பட்டது.
கணிபொறி மேடையில் வெல்லும் காகிதப்போர்
என் காதல் நிலவை நோக்கி பயணித்த பொது காகிதமாய் பரந்த அவளின் நினைவுகள் இன்று காவியமாய் கணிபொறி வரிகளில்.
காலங்கள் கடந்தாலும், பிரிவில் என்னையும் துடிக்க வைத்துவிட்டு கவிதை வரிகளில் உயிர் வாழ்கிறாள்
முள்ளின் நுனி போல, பிரிவின் நுனி மட்டும் தான் வலி என்று இருந்தேன். அந்த நுனி இடம் தந்ததால் தானே முழு முள்ளும் குத்தி இதயத்தை கிழித்தது.
உடைந்திருந்தால் ஒட்டிக் கொள்ளலாம்,
கிழிந்திருந்தால் தைத்துக் கொள்ளலாம்,
வெடித்துச் சிதறியதை சேகரிக்க முடியவில்லையே.
கனவுகள் தொலைக்கப்பட்டால் இழப்பீடு வெறும் உறக்கமே,
நினைவுகள் தொலைக்கப்பட்டால் இழப்பீடு வெறும் கற்பனையே,
ஈடு செய்ய முடியாத உன் அன்பை தொலைத்து விட்டேனே !
கண்ணாடி மட்டையில் கல் பந்தில் விளையாடுவது ஆகி விட்டது என் வாழ்க்கை!
துயரங்களில் துவண்டாலும் வெறும் காகிதப் போர்களுடன் முடித்துக் கொள்கிறேன்.
நம் காதலை காகிதமாய், காவியமாய், கணிபொறி மேடையில் நடக்கப் போகும் வெற்றி விழாவிற்கு உன் பெயர் சூட்டுவேன் அந்த ஒற்றை நிலவுக்கு பரிசளிக்க.
புத்தகமாக கவிதைகளை வெளியிட்டு காகிதப்போருக்கு விடை தேடத் துடித்த உள்ளத்திற்கு கற்பனையிலும் எட்டாத கணிபொறி மேடை கிடைத்தது வரமே.
வானத்தை வட்டமிடுவது ஒற்றை நிலவானாலும் ஆயிரம் முறை ரசித்தாலும் புதியவளாக என்னை மீண்டும் மீண்டும் பித்தனாக்கி செல்கிறாளே.
satrumun nila kavithai
– நீரோடைமகேஷ்
காலம் பதில் சொல்லும் மனமே – கவிதை
நீரோடை தற்பொழுது கவிதைகள், கதைகள், சுய முன்னேற்ற சிந்தனைகள், ஆன்மீக சிந்தனைகள், பெண்களுக்கான வாழ்க்கை தத்துவங்கள், உடல் நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், கோலங்கள் மட்டுமல்லாது மேலும் பல தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. ஆண் குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்கள், உங்கள் வீட்டு செல்வா மகளுக்கான பெயர்கள் அகர
வரிசைப்படி அமைந்துள்ளன. திபாவளி, பொங்கல், கிருஸ்துமஸ், வருடப் பிறப்பு என விழாக்கலங்களில் பகிர வாழ்த்து அட்டைகளும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான வழிமுறைகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் பாட்டி வைத்தியம், ஜோதிட குறிப்புகள், பெண்களுக்கான சிந்தனைகள், குழந்தைகளுக்கான புகைப்பட போட்டிகள், பெண்களுக்கான கோலப் போட்டிகள், மழலைகளுக்கான ஓவியப் போட்டிகளும் நீரோடையை புதிப்புத்துக் கொண்ட வண்ணம். கை பேசிக்கான செயலியை வெளியிட்டு ஆயிரம் பதிவிறக்கங்களை கடந்து நம்மை இன்பப் பேரு வெள்ளத்தில் நீந்தச் செய்தது வாசகர்களாகிய உங்களாலே என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
அழகான கவிதை…
நல்ல வரிகள்… நன்றி நண்பரே…
Ada dapendu mudichiddenkale nilavodu enna kathachenka sir
அழகிய கவிதை பிறக்க காரணமாயிருந்த
மின் தடைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 1
அருமையான கவிதை ..
அழகான வரிகள்