யார் சுமைதாங்கி – கவிதை

வழிப்போக்கன் இளைப்பாற
சுயநலம் அறியா சுமை தாங்கி,
வந்தவர் அமர, அமர்ந்தவர்
நகர, என்றும் சலிக்காத தங்கி ,
பலரின் சோக சுக
துக்கங்களை ஏற்றுக்கொண்டு
வருவோருக்காக காத்திருக்கும்
கற்றூணே – sumai thaangi kavithai.
உன்னை மிஞ்சிய ஒரு சுமை
தாங்கி உண்டென்று தெரியுமா
உனக்கு ? ஆம்
அவளே பெண்.

sumai thaangi kavithai

ஆம் !, அவளே பெண் !
கட்டுப்பாடுகளை சுமக்கிறாள்,
அக்காலத்தில் விறகு
சுமந்தவள், இக்காலத்தில்
பயத்தை சுமக்கிறாள்
பாதுகாப்பின்மையால்.
சில சமயம் வீண் பழிச்சொல்லை
சுமக்கிறாள்.

yaar sumai thaangi

பல சமயம் இயலாதவர்கள்
இழிச்சொல்லை சுமக்கிறாள்.
மணந்தவன் தலைமுறையை
சுமக்கிறாள். மாண்டவன்
குடும்பச்சுமையை சுமக்கிறாள்.
இல்லப் பணிச்சுமையோடு
பொருளாதார(பார)த்தை
சுமக்கும் தாரமாகிறாள்.
கன்னியாய், கற்பிணியாய்,
கன்னியின் தாயாய்,
பணிப்பெண்ணாய்,
ஏழைத்தாயாய், விதவைக்
கோலமாய் என பல இடங்களில்
பெருந்தாங்கியாகிறாள்.
ஆம்!
அவளே உன்னை மிஞ்சும்
சுமை தாங்கி.

– நீரோடைமகேஸ்

You may also like...