தாயும் சேயும் நலம் இடம் சொர்க்கம்
சமீபத்தில் நிகழ்ந்த மரணம் (மரணங்கள்) அனைவரின் மனதை ரணமாக்கியது, அது பற்றி “தாயும் சேயும் நலம்” என்ற தலைப்பில் மணிகண்டன் அவர்கள் நீரோடைக்கு எழுதிய முதல் கவிதை – thaayum seyum nalam.
கருவுற்றவளும் ஓர் தாய் தானே..
ஒரு கணம் நினைத்தாயா கல்நெஞ்சா?
நீ கட்டியவளை இந்நிலையில்..
நினைத்துப் பார்க்கத் தான் மனமுன்டா கல்நெஞ்சா?
பாவம் பசித்த வயிற்றுக்கு படைக்கத்தான்..
பட்டாசு தான் கிடைத்ததா கல்நெஞ்சா?
வனங்களோடு வளரவேண்டிய சிசுவை..
வலிகளோடு அதன் வம்சத்தை அடக்கி விட்டாயே கல்நெஞ்சா!
கூக்குரலிட்டு அழலாம் என்றால்..
பற்றி எரியும் வயிற்றில் ஏனோ பலமில்லை கல்நெஞ்சா!
இரண்டு நாட்கள் இம்சிக்கப்பட்டு
இறைவனடியில் கலந்தாயிற்று.. இப்போது
இன்பம் தானே கல்நெஞ்சா? – thaayum seyum nalam
நீங்கள் விதைத்த விதைகளுக்கெல்லாம் அறுவடை தான்..
2020 உம்மை ஆட்டிப்படைக்கிறது கல்நெஞ்சா..!
எவ்வுயிறும் விளையாட்டல்ல காத்திரு..
இனி பேரிடிகள் உங்களுக்காக கல்நெஞ்சா..!
ஆம் அவர்களுக்கு எல்லாம் ஆறறிவு..
ஆண்டவனே உனக்கு ஏன் இந்த கல்நெஞ்சம்..!
இப்படிக்கு
கண்ணீர் கரைந்த நெஞ்சத்தோடு நானும் சேயும்..!
– மணிகண்டன் சுப்பிரமணியம், கோபிசெட்டிபாளையம்
கவிதையைப் படிப்பதற்கு நெஞ்சில் வலிமை இல்லை. ஒவ்வொரு வரியும் கண்ணீரால் எழுதப்பட்டிருக்கிறது.
கவிதை மனம் கனக்க வைக்கிறது. சூலுற்ற ஒரு ஜீவனுக்கு நேர்ந்த கொடுமை. மனம் பதைக்க வைக்கிறது.
தாயும் சேயும் நலம் இடம் சொர்க்கம் என்ற கவியை படைத்த கவிஞருக்கு வாழ்த்துகள்.. அனைத்தையும் கற்றறிந்த கல் நெஞ்சங்கள் தான் மனிதத்தையும் கல்…… இனியொரு விதி செய்வோம்….
😥😥😢😢
கவிதையின் ஒவ்வொரு வரிகளும் வரிகள் அல்ல.. வலிகள் தாங்கியுள்ளது
மனது வலிக்கிறது