தூரம் போகாதோ – கவியின் கவிதை
தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு நமது நீரோடைக்காக… – thooram pogathe kaviyin kavithai
தயாளனவன்( சூரியன்) தளிர்கரம்
தீண்டிய கணம்….
கருக்கலில் கார்மேகம்
தவழும் வனம்….
மொட்டவிழ்த்த மல்லிகையவளின்
மனமயக்கும் மணம்…..
இன்னிசை எழுப்பும்
இளங்குயில்களின் இனம்…..
சின்னஞ்சிறிய துளிகளை
உதிர்க்கும் தூவானம்…
குளிர்காற்றை சுவாசித்து
உயிர்பெறும் மனம்……
இயற்கையின் எழிலில்
இதயம் இலயிக்கும்போது
நம்மைவிட்டு தூரம்போகாதோ….
துன்புறுத்தும் வேனல்??!!….
– கவி தேவிகா, தென்காசி.
தேவிகா கவிதை இயற்கை யாக நன்றாக இருக்கிறது
கவின்மிகு காலை..மல்லிகை மணம்..இதம் தரும் சாரல்…கவியின் வார்த்தையிலே அத்தனையும் அனுபவித்துவிட்டேன்..தேவிகா அவர்களுக்கு என் வாழ்த்துகள்
கவி தேவிகாவின் கவிதை வரிகள் இயற்கையை ரசித்தால் இன்பமே…என்று உணர்த்தியது.
கதிரவன் ,மல்லிகை மணம், சாரல் மழை, கார் மேகம், சிறு குருவி…மனதை மயக்கும் இயற்கை…அற்புதமான கவிதை..வாழ்த்துகள் சகோதரி..