வார ராசிபலன் ஆடி 32 – ஆவணி 06
ஆடி மாத மின்னிதழ் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். ஆடி சிறப்பு மற்றும் ஆடிப்பூரம், ஆண்டாள் ஜெயந்தி பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். – rasi palangal aug 16 – aug 22
மேஷம் (Aries):

இந்த வாரம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடக்க வாய்ப்புகள் உள்ளது. கணவன்-மனைவி இடையே விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை வேண்டும். வீட்டில் குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள். வியாபாரம் சீரான வளர்ச்சியை அடையும். கலைஞர்கள் நல்ல வருவாய் பெறுவார்கள். மாணவர்கள் சுமாரான பலனை பெறுவார்கள். விவசாயத்தில் நல்ல மகசூல் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: பைரவர் வழிபாடு செய்யாவும்.
ரிஷபம் (Taurus):

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். உங்களுடைய மதிப்பு மக்கள் மத்தியில் சிறப்படையும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்பு உள்ளது. உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பம் மகிழ்ச்சிகரமாக தென்படும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் நல்ல வருமானம் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
மிதுனம் (GEMINI):

இந்த வாரம் சூரிய பகவானே பல நன்மைகளை செய்வார். வீட்டில் மனை யோகம் உள்ளது. குடும்ப ஆரோக்கியம் நன்றாக அமையும். கணவன் மனைவி உறவு மேம்பாடு அடையும். வீட்டில் பணவரவு நன்றாகவே இருக்கும். பணியாளர்கள் சுமாரான பலனை பெறுவார்கள். வியாபாரத்தில் போட்டி மனப்பான்மை உருவாகலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். விவசாயம் காய்கறி வெற்றியின் மூலம் நல்ல வருவாய் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: தினம் விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
கடகம் (Cancer):

இந்த வாரம் சனி பகவான் அளப்பரிய நன்மைகளை செய்து வருவார். ஆயுள்பலம் நன்கு சிறப்படையும். நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தடை இல்லாமல் நடைபெறும். குடும்பத்தில் வீண் கவலைகளை எதிர்கொள்வீர்கள். சகோதர சகோதரிகள் ஆதரவு நன்றாக இருக்கும். பணியாளர்கள் பல நன்மைகளை பெறுவார்கள். வியாபாரத்தில் அரசாங்க சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கலைஞர்கள் பல விருதுகளை பெறுவார்கள். மாணவர்கள் நன்கு சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். விவசாயம் கிழங்கு வகைகள் கொண்டவை நன்கு லாபகரமாக இருக்கும்.
வழிபாடு: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.
சிம்மம் (LEO):

இந்த வாரம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார். வீட்டின் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடையும். குடும்பத்தில் பெண்கள் ஆதரவு நன்றாக இருக்கும். இருப்பினும் குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பிள்ளைகள் சம்பந்தமாக சிறு சிறு பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் கடுமையாக உழைக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு அமையும். கலைஞர்கள் சமநிலை கொள்வார்கள். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.
கன்னி (Virgo):

இந்த வாரம் புதன் பகவான் பல நன்மைகளை செய்வார். உங்கள் புகழுக்கு பங்கம் ஏற்படும் வண்ணம் பிறர் நடந்துகொள்வார்கள். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பணவரவு நன்றாகவே அமையும். சகோதரர் ஆதரவு பெருகும். பணியாளர்கள் மிகவும் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் பெண்கள் மூலம் தொல்லைகள் வரலாம். கலைஞர்கள் சோர்வை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் கல்வியில் தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது. விவசாயம் பழவகைகள் மூலம் நல்ல ஆதாயம் பெறலாம்.
வழிபாடு: புதன்கிழமை அன்று குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.
துலாம் (Libra):

இந்த வாரம் புதன் பகவான் பல நன்மைகளை செய்வார். உடல் ஆரோக்கியம் நன்றாக காணப்படும். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். வீட்டில் பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் சமூக அந்தஸ்து கூடும். பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் விரிவுபடுத்தப்படும். கலைஞர்கள் பெண்களின் ஆதரவை நாடுவார்கள். மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயத்தில் குடும்ப தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
வழிபாடு: ராகு பகவான் வழிபாடு செய்து வரவும்.
விருச்சிகம் (Scorpio):

இந்த வாரம் சூரியபகவான் நன்மையே செய்து வருவார். உடல் ஆரோக்கியம் நன்றாக காணப்படும். முயற்சிகள் அனைத்தும் நல்ல வெற்றியை அடையலாம். பணவரவு நன்றாக அமையும். புதிய வீடு மனை வாங்க யோகம் உள்ளது. பணியாளர்கள் உயர்ந்த பதவியை அடைவார்கள். வியாபாரம் நன்மை பயக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வார்கள். விவசாயம் சீராக வளர்ச்சி அடையும்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.
தனுசு (Sagittarius):

இந்த வாரம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார். வீட்டில் சிறுசிறு குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் மேம்பாடு அடையும். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் நல்ல வளர்ச்சி அடைவார்கள். வியாபாரம் சீரான வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் பெண்கள் மூலம் பிரச்சினையை எதிர் கொள்வார்கள். மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கும். விவசாயம் நவீன இயந்திரங்கள் மூலம் சிறப்படையும்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
மகரம் (Capricorn):`

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். வீட்டில் பிள்ளைகளால் பெருமை கொள்வீர்கள். உடல்நலம் நன்றாகவே இருக்கும், எடுத்த முயற்சிகள் நல்ல வெற்றி காணலாம். பணியாளர்கள் நல்ல சிறப்பை அடைவார்கள். எதிரிகள் சதி முறியடிக்கப்படும். கலைஞர்கள் முயற்சியை தலையில் முடியும். மாணவர்கள் வெற்றி காண்பார்கள் விவசாயம் கீரை வகைகள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: விநாயகர் வழிபாடு சாலச்சிறந்தது.
கும்பம் (Aquarius):

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், வசதி வாய்ப்புகள் பெருக வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மூலம் உதவியை எதிர்பார்க்கலாம். பணியாளர்கள் சுமாரான வருவாய் பெறுவார்கள். வியாபாரத்தில் பெண்கள் உதவி கிடைக்க பெறுவார்கள். கலைஞர்கள் உற்சாகத்துடன் தென்படுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றியை அடைவார்கள். விவசாயத்தில் வருமானம் உயரும்.
வழிபாடு: சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.
மீனம் (Pisces):

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணவரவு நன்றாகவே அமையும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும், சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெற வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் முன்னேற்றப்பாதையில் செல்வார்கள். வியாபாரத்தில் பகைவர்கள் தொல்லை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கலைஞர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். மாணவர்கள் நற்பலன் பெறுவார்கள். விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்கலாம்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமையன்று முருகப்பெருமானை வழிபாடு செய்து வரவும் – rasi palangal aug 16 – aug 22.
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)
ராசி பலன் கணிப்பு படி சரியாக நடக்கின்றது அஞ்சலர்ஐயா அவர்களுக்கு நன்றி
ராசி பலனுடன் வணங்க வேண்டிய தெய்வம் பற்றிய குறிப்பு மிகவும் நன்று..மிக்க நன்றி…