வார ராசிபலன் ஆனி 14 – ஆனி 20

இந்த வார ராசி பலன் பற்றி நமது வலையொளி (YouTube) சானலில் காண சொடுக்கவும் – rasi palangal june 28 – july 04.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும், குடும்ப ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் உயரும். கலைஞர்கள் தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவார்கள். விவசாயத்தில் சுமாரான பலனையே தரும்.
வழிபாடு: முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சுக்கிரன் பகவான் நன்மைகள் செய்வார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும், பணவரவு சிறப்பாக  இருக்கும். வீட்டில் குழப்பங்கள்   நிலவ வாய்ப்புள்ளது. பணியாளர்கள் பதவி உயர்வை பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் ஏதேனும் ஒரு வழியில் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வார்கள். மாணவர்கள் வெற்றிப்பாதையில் பயணிப்பார்கள். விவசாயம் நல்ல பலனை ஈட்டித்தரும்.
வழிபாடு: தினமும் காலை சூரிய வழிபாடு செய்யவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சந்திர பகவானே நன்மை செய்வார். குடும்ப தேவைகள் பூர்த்தி செய்யப்படும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். உறவினர் வருகை நன்மையில் முடியும். பணியாளர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. கலைஞர்கள் வருவாய் இழப்பை சந்திப்பார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். விவசாயம் கால்நடை வளர்ப்பு மூலம் வருமானம் ஈட்டித்தரும்.
வழிபாடு: நவகிரக வழிபாடு செய்யவும்.



கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வரம் சந்திர பகவான் நன்மை செய்வார். குடும்ப பண வரவு நன்றாக இருக்கும். அண்டைவீட்டார் மத்தியில் நட்புறவு மேம்படும். கணவன் மனைவி உறவு சிறக்கும். பணியாளர்கள் கவனமாக இருக்கவும். தொழில் வியாபாரம் சுமாரான லாபம் இருக்கும். கலைஞர்கள் மக்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயத்தில் நல்ல வருமானம் பெறலாம்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனி பகவான் வழிபாடு செய்யவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மை செய்வார். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் பணப்புழக்கம் நன்றாக அமையும். உறவினர் வகையில் நன்மை சேரும். பணியாளர்கள் சிரமப்பட வேண்டிய தருணம்.  தொழில் வியாபாரம் சுமாராக நகரும்.  கலைஞர்கள் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். மாணவர்கள் கவனமாக இருக்கவும். விவசாயத்தில் இரட்டிப்பு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
வழிபாடு: சிவ வழிபாடு செய்யவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் குரு பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில் பணவரவு நன்றாக இருக்கும், தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணியாளர்கள் இதர வருமானம் பெறுவார்கள். தொழில் வியாபாரம்பழைய பாக்கி வசூலாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நன்மை பெறுவார்கள். விவசாயத்தில் லாபம் அதிகரிக்கும்.
வழிபாடு: சனிபகவான் வழிபாடு செய்யவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் குரு பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை நிலவும், வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. பயணத்தில் கவனம் தேவை. பணியாளர்கள் சிரமப்பட வேண்டி இருக்கும். வியாபாரத்தில் பூஜை பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். கலைஞர்கள் சிரமப்பட்டே முன்னேற்றம் காண்பார்கள். மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்வார்கள். விவசாயத்தில் இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வழிபாடு: விநாயகர் வழிபாடு செய்யவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில் குழப்பங்கள் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியடையும். சகோதர வழியில் உறவு மேம்படும். பணியாளர்கள் (விவசாயம்) முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. கலைஞர்கள் சுமாரான பலனை பெறுவார்கள். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: நவகிரக வழிபாடு செய்யவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குரு பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தேவைகள் பூர்த்தி செய்யப்படும், பணவரவு நன்றாக இருக்கும். சங்கடங்கள் தீர்க்கப்படும். பணியாளர்கள் பணியில் தலைமை பொறுப்பு பெறுவார்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி அடையும். கலைஞர்கள் விட்டுக்கொடுத்து போகவும். மாணவர்கள் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் சுமாரான வளர்ச்சி தரும்.
வழிபாடு: சனி பகவான் வழிபாடு செய்யவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குரு பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில் புதிய, வீடு வாகனம் வாங்க யோகம் உள்ளது, பணவரவு சுமாராக இருக்கும். பணியாளர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் வியாபாரம் லாபம் ஈட்டித்தரும். கலைஞர்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வார்கள். மாணவர்கள் ஆரோக்கியமாக காணப்படுவார்கள். விவசாயத்தில் வருமானம் உயரும்.
வழிபாடு: தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில்  ஆரோக்கியம் நன்றாக இருக்கும், பணவரவு நன்றாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். தொழில் வியாபாரம் பங்குதாரர் இடையே குழப்பங்கள் வரலாம். கலைஞர்கள் அரசாங்க ஆதரவை பெறுவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயம் தேவைகள் பூர்த்தியாகும்.
வழிபாடு: முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். சகோதர வழியில் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் குழப்பங்கள் வந்து மறையும், ஆரோக்கியம் நிலவும். பணியாளர்கள் பணியில் வரவு செலவை கவனமாக வைத்துக்கொள்ளவும். தொழில் வியாபாரம் பழைய பாக்கி வசூல் ஆகும். கலைஞர்கள் வருவாய் பற்றாக்குறையால் தவிப்பார்கள். மாணவர்கள் பெட்டோர்களின் வழிகாட்டுதல்படி நடப்பார்கள். விவசாயத்தில் சொத்து பிரச்சனை தீர்க்கப்படும்.
வழிபாடு: தினமும் காலை சூரிய வழிபாடு செய்யவும் – rasi palangal june 28 – july 04.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

3 Responses

  1. R. Brinda says:

    நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும்!!

  2. ராஜகுமாரி போருர் says:

    ராசி பலன் வழி பட வேண்டிய கடவுள் இரண்டும் சேர்ந்து சொல்லி இருப்பதற்கு நன்றி

  3. தி.வள்ளி says:

    சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது. வழிபட வேண்டிய தெய்வம் பற்றி அறியத்தருவது கூடுதல் சிறப்பு