வலையோடை பதிவு 4
சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 4
தொலைதூரமாய் நீ இருந்தாலும்
உன் நினைவுகள் தொலையாமலே
இருக்கிறது
@abhi_heartz
பணம் இல்லையென்றால் வறுமையில்தான் இருக்க வேண்டும் -ஆனால் சந்தோஷமாக இருக்கலாம்….!
@Gowshhh
எதுவும் நிரந்தரமில்லை என்பதை ஒரு மரணம், ஒரு நிராகரிப்பு எளிதில் புரிய வைக்கிறது.
@THARZIKA
நேசத்தில் இயல்பை இழப்பது இயல்பான ஒன்றுதான்!!!
@Kannan_Twitz
சூழல்கள் எதுவாகினும்,
நமக்கென நேரம் ஒதுக்கி,
மனம் விட்டு பேசும் நேசம்
கிடைப்பது வரம்.!!
@Priyanka_Twitz
நனைய ஆட்களின்றி
பெய்த மழையின்
மிச்சங்களை
தூறி கொண்டிருக்கின்றன
சாலையோர மரங்கள்…
@Itz_Me_Shylu
கிடைப்பது எதுவும்
நிரந்தரமானதும் அல்ல,
இழப்பது எதுவும்
உனக்கானதும் அல்ல,
எதற்காக கவலைப்பட வேண்டும்.?
@nikhan_twitz
அத்தனை அன்பையும்
மறக்க வைத்து விடுகிறது
கோபம்
எத்தனை கோபத்தையும்
மறந்து விடுகிறது அன்பு
@TRAMESH21548526
அன்பால் ஒளிரும் வீடு ஆயிரம் சூரியன்களுக்குச் சமம்.
@raajaacs
பாறையில் விழுந்தாலும்,
மழை நீர்
நதியில் சேரும் போது,
வானின் பிழை
நீங்குகிறது !
@laksh_kgm
விழலாக பொருளெனாது
நல் உழவாகும்
காப்பென்றறிந்தே பெண்ணுக்கு நிகராக்கினன்
மறவாது பயின்றோறே – உரு
மறையென நம்பும் வாழ்வில் மனம்
குன்றாதிருப்பவனே ஆண்.
@Princepoiya
அனைவருக்கும் வாழ்த்துக்கள்