முத்தான மூன்று தினம்
மூடி வைத்த தீய எண்ணங்கள்
ஓடி போய் தீர்ந்தது – இந்த
“போகித்” திருநாளில்
தேடி வருகுது நல்ல எண்ணங்கள் !
யோகியைப் போல் மாறாவிட்டால்
தியாகியாகி தேகம் தேய உழைப்போம்!
இதனால் போகம் விளைவதுடன்
யோகமும் தேடி வரும்! – muthana moondru thinam pongal 2020
muthana moondru thinam
சூரியன் என்ற மன்னவன்
பரி மீதேறி – அங்கே
அரியணை ஏறும் உன்னத தினம்
அது கதிரவனுக்குரிய
கைதிகள் செழித்து வளர்ந்தது
கொண்டாடும் “தை” தினம் …..
என்ற “தைத் திருநாள்!
வாயிருந்தும் உண்ண மட்டுமே
சாய்ந்தாடும் மனிதருக்கு மட்டுமா
திரு நாட்கள்..
புல் உண்டு பாலாக்கும் பசுக்களுக்கும்
சில் என்று மணியினை ஆட்டி
கல் மண் என வண்டி இழுக்கும்
காளைகளுக்கும் உரிய தினம்….
அது மாடுகளை கொண்டாடும்
“மாட்டுப் பொங்கல்“ தினம்!
முத்தான மூன்று தினமும்
மூத்தோர் வழி நடந்து
சித்தம் தெளிய உற்றார்
உறவினருடன் குதூகுலமாக
கொண்டாடி மகிழுவோம்!
– உஷாமுத்துராமன், திருநகர்
தை மகளேவருக
சொந்த பந்தத் தை
சுற்று வட்டாரத் தை
நட்பு வட்டத் தை
நல்ல எண்ணத் தை
பக்தி மார்க்கத் தை
பகவான் நாமத் தை
பகிரும் ஞானத் தை
கொழிக்கும் செல்வத் தை
வெற்றி வீரத் தை
விவேகத் தை
விவசாயத் தை
நல்ல பருவத் தை
தர்ம மார்க்கத் தை
தரும் ஆன்மீகத் தை
நாளெல்லாம் பெருக்கி
நமக்கு தர வருகிற
தை மகளே
நீ எமக்கு
ஆரோக்யத் தை
சந்தோஷத் தை
அன்பின் ஆதாரத் தை
அறிவின் சஞ்சாரத் தை
தந்து மகிழ வா
வரம் தந்து நெகிழ வா
– கவித்தென்றல் பாலாஜி, சுந்தரம் புத்தக கடை, போளூர்
பொங்கலிட்டு உழவர்களை வானுயர வாழ்த்திடுவோம்
நாடெங்கும் உழவர் கூட்டம்
நயமுடனே நாற்று நட்டு
ஆதவனை நிதம் சுமந்து
அறுவடைக்கு காத்திருக்கும்
கேணியிலிருந்து நீரிறைத்து
காணியெங்கும் ஓடவிட்டு
முந்திவரும் களையறுத்து
முசுநோக பாடுபடும்
நெடுநெடுனு வளர்ந்த கதிர்
நாணத்துடன் தரைநோக்க
கதிர் அருவா கேள்விகளுக்கு
களமெங்கும் பதிலாய் கிடைக்கும்
போர் அடித்து வேகவைத்து
பொதி நிறைய சந்தைசேத்த -அதை
வாங்கி வந்து பொங்கலிட்டு
வானுயர வாழ்த்திடுவோம்.
– அந்தியூரான் (ஸ்ரீராம் பழனிசாமி)