அந்த நாற்காலிக்கு அறுபது வயசு

நடுத்தர வர்க்கத்தின் ஓய்வு பெற்ற ஓர் அறுபது
வயது (நபரின்) நாற்க்காலியின் வரிகள் #########

andha naarkaalikku arubathu-vayasu

வீட்டை சுற்றி வரக்கூட தள்ளாடும் வயதில்
மனம் மட்டும் விண்வெளிக்கப்பலாய்
விண்ணில் பயணிக்க ! !

வேலையில் இருந்து ஓய்வு கிடைத்தும்
இன்னும் ஓய்ந்து விடாத கேள்விகள்
என்ன செய்தேன் என் இந்தியாவுக்கு ????

பார்ப்பதற்கே வாடைக் கண்களாய்
என் மூக்குக் கண்ணாடி தேடும்
இந்த வயதில் என்ன செய்ய முடியும்
என் இந்தியாவுக்கு ??

தாமத உதயங்கலாய் என்னில்
தினம் தினம் இந்த ஏக்கங்கள..

சந்தர்ப்பங்களை கைது செய்த
சூழ்நிலைகள் சூழ்ந்த பல தருணங்கள் .

விழாக்கால பேருந்தின் நெரிசலில்
சிக்கித் தவிக்கும் விடுகதைகள் ஆனேன் ?

உதிரும் நரைமுடிகள் கூட சொல்லும்
வயதைக் கடத்தி வாசகம் செய்தவன்,
சாகசம் செய்ய மறந்ததேன் ????????

 – நீரோடைமகேஸ்

You may also like...

10 Responses

 1. நாற்காலிக்கும் வயதாகும்
  தான் சுமந்த மனிதனுடன்
  அதுவும் மூலையில்தான்!

 2. மிக அருமையாக உள்ளது கவிதை! வாழ்த்துக்கள்!

 3. பன்னிக்குட்டி ராம்சாமி says:

  அடடடா… அருமையான வார்த்தைகள், கருத்துச்செறிவு, கவிதை நன்றாக உள்ளது நண்பரே… வாழ்த்துக்கள்!

 4. dineshkumar says:

  முதல் முறை வருகிறேன் தங்கள் கவிதை உலகிற்க்கு அத்தனையும்
  அருமை தொடருங்கள் நண்பரே தமிழ்
  வளர தோள் கொடுப்போம் வாருங்கள்

  கலியுகம்
  தினேஷ்குமார்

  http://marumlogam.blogspot.com

 5. நண்பரே கவிதைகள் நன்றாக இருக்கின்றன. அப்படியே எழுத்துப்பிழைகளை தவிருங்கள் மற்றும் தமிழ்மணத்திலும் உங்கள் பதிவுகளை இணையுங்கள்.

 6. Hi bloggers/webmasters submit your blog/websites into http://www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends….

  http://www.ellameytamil.com

 7. Maheswaran.M says:

  கருத்துரை கொடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள் நண்பர்களே

  இது என்னை மேலும் மேலும் மெருகூட்டுகிறது நன்றிகள்.
  MAHESWARAN

 8. மிகவும் நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் கவிதை அருமை . இயன்றவரை எழுத்துப்பிழைகளை குறைக்கவும் வார்த்தையின் பொருள் இதனால் முற்றிலும் மாற்றப் பட்டுவிட்டது

 9. ஃஃஃஃஃபார்ப்பதற்கே வாடைக் கண்களாய்
  என் மூக்குக் கண்ணாடி தேடும்
  இந்த வயதில் என்ன செய்ய முடியும்
  என் இந்தியாவுக்கு ??ஃஃஃஃஃ

  அழுத்தமாக வருடிச் செல்கிறது.. சகோதரம்..

  அன்புச் சகோதரன்…
  ம.தி.சுதா
  http://mathisutha.blogspot.com/