ஐப்பசி மாத மின்னிதழ் (Oct-Nov 2020)
இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மற்றும் புரட்டாசி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – ippasi matha ithal.
பெண்
கடிதத் தொடர்பை அறுத்தாகிவிட்டது
சிபிகள் சதை பகிர்வும்
தரம் இழந்திருந்தன
எங்கோ ஒலிக்கும்
தூரத்து பெண்வாடை
ஆராய்ச்சி மணியோசையாய்
அவர்கள் செவிகளை தீண்டாதிருந்தன
சொர்க்கத்து கதவுகள் திறந்திருந்தும்
அசைவற்ற நெகிழிச் சிலையாய்
ஆங்காங்கே பெண்பாற் பெயர்கள்
”பெண்களற்ற உலகம் மயானம்”
– பொய்யாமொழி.பொ, தருமபுரி
அவளும் பெண் தானே
அத்தனையும்
அவளே என்றும்
அத்தனைக்கும்
அவளே என்றும்
அறைகூவல் கூவும் நான்
அவளை நாம்
அன்பாகவும்
அனுசரனையாகவும்
அனுமதித்து உள்ளோமா
அமைதியாக யோசித்து பாருங்கள்….
அதிகாலையில்.. – ippasi matha ithal
அடுப்பாங்கரையில்…
அலுத்துக் கொள்ளலில்…..
அழுகையில்..
ஆரம்பிக்கும் வாழ்க்கை…
அர்த்தராத்திரியில்
‘அதனோடு’ முடிகிறது…
அதற்கிடையில்..
அவளின்..
அத்தனை..
ஆசைகளும்..
அத்தனை
அன்புகளும்
அத்தனை
ஆசாபாசங்களும்
அத்தனை
ஆற்றல்களும்
அத்தனை
அசாதாரண பிடித்தல் நிகழ்வும்
அவளுக்குள்ளையே..
அடங்கிப்போகிறது…!
ஆதலால்
அவளுக்கும்
அன்பான மனம் உள்ளது
அதில்
அந்த மனதில்
அழகான ஈரம் உள்ளது
அந்த ஈரத்தில்
அவளுக்கு மட்டுமே பிடித்த
அருமையான
அமைதியான
அழகு வாழ்க்கை உள்ளது என்பதை
அறிந்தாலே போதும்
அவள்
அடையும்
ஆனந்தத்திற்கு
அளவே இருக்காது……..
அவளும் பெண் தானே…..
சில பெண்கள் இதில் விதிவிலக்கு
இதில் அவர்கள் வருவதில்லை….
பேசும் கண்களும் பேசாத உதடுகளும்
விடைகளில்லாத வினாக்களோடு சுழல்கிறது என் உலகு…
நான் ஏன் இன்னமும் உன்னைக்
காதலித்துக்கொண்டிருக்கிறேன்
என்பதற்கும். நீ ஏன் என்னைக்
காதலிக்கவே இல்லை என்பதற்கும்
சுழல்கிறது என் உலகு!.
உன் பேசும் கண்களுக்கும் பேசாத உதடுகளுக்கும்
இடையில்தான் இறந்து கிடக்கிறது என் காதல் !
பேசப்போவதற்கு யோசிப்பதிலும் பேசியவைகளுக்கு
யோசிப்பதிலும் நிரம்பி விடுகிறோம் நாம்!
– நவீன், ஈரோடு
கண்ணன் என் மன்னன்
கண்ணன் திராத விளையாட்டு பிள்ளை!
கண்ணன் ஒரு சேவகன்!
கண்ணன் ஒரு புன்னகை மன்னன் !
கண்ணன் பாரதியின் நண்பன் !
கண்ணன் ஒரு வில்லிபுத்திரன் !
கண்ணன் வீராத்தின் காவலன் !
கண்ணன் ராதையின் காதலன் !
அர்சுனனின் சாகோதரன்,
தன் தாயின் மடியில் மழலை,
மங்கையர்க்கோ தீராத விளையாட்டு பிள்ளை,
விரும்பாத உயிர்களுண்டோ உலகில் …
– கார்த்திக், மைலம்பட்டி, திருச்சி
வேதத்திற்கு செய்ய வேண்டிய நற்காரியங்கள்
காஞ்சி பெரியவரிடம் (பெரியவாளிடம்) அந்த ஏழைப் பாட்டிக்கு அப்படியொரு பக்தி. பரம ஏழையான பாட்டி பெரியவாளிடம் அப்படியொரு பக்தி கொண்டவள். “இப்போ… எங்க ஜாகை?….” – ippasi matha ithal
“பட்டணத்துக்கு [மெட்ராஸ்] வந்துட்டேன். அப்பளாம், வடாம் பண்ணி ஏதோ… வித்து பொழைப்பு நடந்துண்டிருக்கு பெரியவா…”
“பாட்டிக்கு ரெண்டு பொடவை, கம்பிளி போர்வை, மெட்ராஸ் போறதுக்கான பஸ் சார்ஜ் எல்லாம் குடுத்துடு” . பாரிஷதரிடம் உத்தரவிட்டார். எல்லாம் வந்ததும், பாட்டி பக்கம் நகர்த்தினார். பாட்டிக்கு பரம ஸந்தோஷம்!
“பெரியவா….. ஒரு மடிஸஞ்சி கெடைச்சா தேவலாமா இருக்கும்..” . பெரியவாளின் கண்ஜாடையில், மடிஸஞ்சி எங்கிருந்தோ தேடி எடுக்கப்பட்டு, பாட்டிக்கு தரப்பட்டது.
ஒன்று பாக்கியிருக்கிறதே
“பெரியவா கையால…. ஒரு ருத்ராக்ஷ மாலை…”. பாரிஷதர் கொண்டுவந்த ருத்ராக்ஷ மாலையை, தன் திருக்கரத்தால் தொட்டு ஆஶிர்வதித்து, அழகான புன்னகையுடன் பாட்டியிடம் தந்தார்.
“அப்பனே! ஜபமாலை தந்த என் ஸத்குருநாதா!..”… பாட்டி அமோஹமான ஆனந்தத்துடன், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். ஆனாலும், இன்னும் ஏதோ…… ஒன்று பாக்கியிருக்கிறதே! கொஞ்ச தூரம் சென்றவள், மறுபடியும் பெரியவாளிடம் வந்து நின்றாள். இம்முறை கேட்பதற்கில்லை! பெரியவாளுக்கு கொடுப்பதற்காக வந்தாள்…
அவரிடமிருந்து எத்தனைதான் பெற்றுக் கொண்டாலும், ஆஹார நியமத்தின் புருஷனுக்காக, அன்பின் மிகுதியால், தான்… பண்ணிக்கொண்டு வந்ததை தருவதில் உள்ள ஆனந்தம், பாட்டிக்கு கொஞ்சம் ஜாஸ்தியாகத்தான் இருந்தது.
அப்போதெல்லாம் பெரியவா ஓரளவு அன்னபிக்ஷை ஏற்றுக் கொண்டிருந்த காலம். பாட்டிக்கோ, பெரியவாளுக்கு எவ்வளவு பண்ணினாலும் தகும், ஆனால் தனக்கு பணத்தால் எதுவும் பண்ண முடியாவிட்டாலும், அப்பளம், வடாம் பெரியவாளுக்காக மடியாக பண்ணமுடியும் என்பதால், பக்தி ஶ்ரத்தையோடு நிறைய அப்பளாமும், வடாம் சில தினுஸும், குழம்புக் கருவடாமும் பண்ணி எடுத்து வந்தாள். அவள் கையில் பெரிய ஸம்படத்தை பார்த்துமே சிரித்துக் கொண்டே கேட்டார்…
“என்ன கொணுந்திருக்க..?”….
“பெரியவா…. என்னமோ ஒரு ஆசை! பெரியவாளுக்குன்னு மடி மடியா… அப்பளாமும், வடாமும், கொஞ்சம் கொழம்பு கருடாமும் எடுத்துண்டு வந்திருக்கேன்… ஏத்துண்டு அனுக்ரஹம் பண்ணணும்…”.. கனிவுமயமாக அவளைப் பார்த்தார்…
“நா… ஒன்னோட அப்பளாம் கருடாத்தை அப்டியே ஸ்வீகரிச்சுண்டுட்டேன்! ஸந்தோஷந்தானே?”… “எனக்கு வேற என்ன வேணும்?..பகவானே!.”
பாட்டியின் கண்கள் ஆறாக பெருக்கியது. “இப்போ…நீ, எனக்காக இன்னோரு கார்யம் பண்ணு….” பாட்டி குஷியாகிவிட்டாள்!
“லோகம் நன்னா இருக்கணும்-னா… வேதம் இருந்துண்டே இருக்கணும். அப்டி இருக்க பண்றதுக்காகதான் என்னால ஆனதெல்…லாத்தையும் பண்ணிண்டிருக்கேன். கஷ்டப்பட்டு ஆளை சேத்து… அங்கங்க வேத பாடஶாலையெல்லாம் நஸிச்சு போகாம காப்பாத்தி குடுக்கறதுக்கு முயற்சி பண்ணிண்டிருக்கேன்…….. “
கொஞ்ச நேர மௌனத்துக்குப் பின்….
“……..வேற என்னல்லாமோ படிப்பு இருக்கு.! எந்த படிப்பு படிச்சு எந்த தொழிலுக்கு போனாலும், கை நெறைய்ய ஸம்பளம்-னு இருக்கற இந்த நாள்லயும்… என் வார்த்தையை கேட்டுண்டு செல தாயார் தகப்பனார்கள்….
பசங்களை பாடஶாலைக்கு அனுப்பிண்டிருக்கா! என்னையே நம்பிண்டு… கொழந்தேள, அப்டியே……. ஒப்பு குடுத்திருக்கா!…… வரப்போற காலத்லயும், வேதம் போய்டாம, கொஞ்சமாவது ரக்ஷிச்சு கொடுக்க போற அந்த கொழந்தேள்தான் எனக்கு உஸுர் !……… ஆகைனால, நீ என்ன பண்றேன்னா…..சின்ன காஞ்சீபுரத்ல, மடத்து பாடஶாலை இருக்கு. அங்க, ஸுந்தரம்-ன்னு ஸமையலைப் பாத்துக்கறவன் இருக்கான். எனக்காக நீ பண்ணிண்டு வந்த, இந்த அப்பளம், கருடாத்தை அவன்ட்ட குடுத்து, கொழந்தேளுக்கு வறுத்து போட சொல்லு…”
“அப்டியே செஞ்சுடறேன் பெரியவா….இப்போவே போறேன்….” , “…..நா… சொன்னேன்னு சொல்லு. பாவம்! அதுகள்… அப்பளாம், கருடாத்தையெல்லாம்…. பாத்தே எத்தனையோ காலமாயிருக்கும்! அதனால ஸந்தோஷமா ஸாப்டு-ங்கள்! அதுவே எனக்கு பரம ஸந்தோஷம்….! நம்மள நம்பிண்டு பெத்தவா….அதுகளை அனுப்பினதுக்கு, பதிலா…. நாமும் ஒண்ணு பண்ணினோம்-ங்கற ஸந்தோஷம்”
பெரியவாளின் திவ்யஶரீரதிற்காக கொண்டு வந்த அப்பளாம், வடாம் எல்லாம், அவரது உயிராக உள்ள வேதம் பயிலும் சிறுவர்களின் உதரத்துக்குள் செல்வதில், பாட்டிக்கும் ரொம்ப ஸந்தோஷம். ஸாதாரண லோகாயத அம்மாக்களே, அவர்களது குழந்தைக்கு யாராவது ஏதாவது உஸத்தியாக, பிடித்ததாகச் செய்தால், குழந்தைகளை விட, அம்மாக்கள்தான் அதிக ஸந்தோஷமடைவார்கள். இவளோ…..வேதஜனனி இல்லையா? வேதம் படிக்கும் குழந்தைகளை நன்றாக ரக்ஷிப்பதை விட, நம் வேதஜனனியை ஸந்தோஷப்படுத்த, வேறு ஸாதனை ஏதும் தேவையா என்ன? – நன்றி நாராயணன் தாத்தா
முக்கிய விரத தினங்கள் அமாவாசை - ஐப்பசி 29 (14-11-2020) பௌர்ணமி - ஐப்பசி 15 (31-10-2020) பிரதோஷம் - ஐப்பசி 12 (28-10-2020) மற்றும் ஐப்பசி 27 (12-11-2020)
அனைத்து கவிதைகளும் அருமை, வேதத்தை பற்றிய செய்தி பயனுள்ளது.
கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள், வளர வேண்டும்..
வாழ்க வளமுடன் கனவுப் பூக்கள் கதை அருமை அற்புதம் சொல்ல வார்த்தைகள் இல்லை இதுபோல நல் இதயங்கள் ஏக்க பூக்கள் என் வாழ்க்கையில் நிறைய பேரை கண்டு கேட்டு வியந்திருக்கிறேன் அவர்களை பார்க்கும் பொழுது நம் நிலையை ஒப்பிட்டால் தெரியும் நான் எவ்வளவு சுயநலவாதி என்று திகைத்தேன் அதிர்ந்தேன் ஏதாவது வழி கிடைக்குமா என்று என்னால் முடிந்தது ஒரு சேவை எனக்கு தெரிந்த யோகா கலையை வசந்தா போன்ற குழந்தைகளுக்கும் பணம் வாங்காமல் கற்றுத் தரலாம் என்று நினைத்து செயல்படுத்தி வருகிறேன் உங்களை போன்ற பத்திரிகைகளிலும் இது போன்ற கதைகளை பதிவு இடுவதன் மூலம் என்னைப்போல் ஒரு சிலர் மாற்றம் அடையலாம் இது எனது கருத்து வாழ்த்துக்கள் நீரோடை நீரோடை கவிதை
ஐப்பசி மாத பதிவுகள் கட்டுரை கவிதைகள் அனைத்தும் அட்டகாசம்
பெண்களற்ற உலகம் மயானம் எனக் கூறும்கவிபொய்யாமொழி…பெண்ணுக்கும் அன்பான மனம் உள்ளது ஈரம் உள்ளது அவளுக்கென்று ஒரு மனம் உள்ளது எனக் கூறும் கவி நவீன் … பேசும் கண்களுக்கும் பேசாத உதடுகளுக்கும் இடையே இறந்து கிடக்கும் காதல் என கவிகளின் கவிதைகள் தேன்கூடு…கண்ணனின் மேலுள்ள திரை தீராத பிரேமை கூறும் மழலை கவி கார்த்திக் இவர் எதிர்காலத்தில் சிறந்த இளம் கவியாக உருவெடுப்பார் என்பதில் ஐயமில்லை ….பக்தையிடம் ஏற்றுக்கொள்ளும் அப்பளம், வடாம்..அதை வேதம் படிக்கும் மாணவர்களுக்கு அளித்து சந்தோஷம் அடையும் மஹாபெரியவா…மொத்தத்தில் ஒரு பஞ்சாமிர்தமாக ஐப்பசி மாத மின்னிதழ்….
Kavidhai super especially Naveen erode kavidhai nice …..bazhthukal
Kavidhai super especially Naveen erode kavidhai nice …..bazhthukal
நீரோடைக்கு நன்றி. வாசித்த வாசகர்களுக்கும் நன்றி. கதையும் கவிதைகளும் அருமை.
கவிதைகள் அனைத்தும் அருமை. பெண்களின் மாதமா என்ற கருத்தை ஏற்படுத்தியது.
பெரியவாளும் பாட்டியும் – அற்புதம். சொல்ல வார்த்தைகள் இல்லை. அற்புதம்.