பெண் – கவியின் கவி
தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் முதல் கவிதை நமது நீரோடைக்காக – kavi devika kavithai
அகிலத்தின் அதிபதியவள்!!
அசாதாரண ஆகரியவள்!!
ஆக்கலின் இலங்கிழையவள்!!
இசைத்தமிழின் ஈறிலியவள்!!
ஈடில்லா உசாத்துணையவள்!!
உரைக்காலத்தின் ஊராண்மையவள்!!
ஊகையின் எல்லவள்!!
எழுச்சியின் ஏகலைவியவள்!!
ஏம்பலின் ஐம்பொறியவள்!!
ஐயமகற்றும் ஒட்பமவள்!!
ஒப்புமையில்லா ஓவியமவள்!!
ஓம்கார ஔவையவள்!!
ஆகரி, இலங்கை – பெண்
அறிவி – கடவுள்
உசாத்துணை- தோழி
ஊகை – கல்வி
எல் – பகலவன்
ஏம்பல் – ஆரவாரம்,இன்பம்
ஒட்பம் – அறிவு.
ஓம் – ப்ரணவம்
ஔவை – தவப்பெண்.
ஊராண்மை – ஊராளும் தன்மை.
– கவி தேவிகா, தென்காசி.
கவிதை அருமை..புதிய சொற் பிரயோகம் ..பொருளுடன்..அருமை
Super kavi, nalla irukku