மனம் கொத்திப் பறவை
அந்த நிலைமையில் காதலனின் எண்ணங்களை, புலம்பல்களை கவிதையாக
சித்தரித்திருக்கிறேன் manam kothi paravai kavithai.
நீ என்ற என் வானம் விண்வெளிப் பயணம் சென்றதால்.உன் திருமணத்தில் நான் மணமகனாக,
உன் இறுதி ஊர்வலத்தில் நான் துணையாக,
என்று வாழ்ந்து வந்த என் நினைவுகளை,
கல்லறைக்கு முதல் பரிசு பெற அனுப்பியவளே.
நீ உன் வாழ்க்கையை வாழவில்லை,
உன்னை தான் உன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது.மணம் கண்ட என் உணர்வுகளை மதிக்காமல்,
பணம் கண்ட பாதையில் போறவளே !.
மரம் கொத்திப் பறவைகூட
மரத்தை காயப் படுத்தினாலும்
அதிலேயே தங்கி வாழும்.. ஆனால்
நீயோ என் மனதை கொத்திவிட்டு
பறந்து உன்வழிப் பயணம் செல்கிறாய்.
அழகிப் போட்டியில் உன்னழைகை உலகம் பார்த்து
முதல் பரிசு கொடுத்தாலும்,
என் மனதில் அங்கே நீ வெறும் கல் தான்.
என் எண்ணங்கள் தவறாக இருக்கலாம்,
நீயும் , உன் அழகின் தரிசனங்களும் என்றும்
எனக்கு மட்டுமே வேண்டும் என்று அடம் பிடிக்கும்
என் கரிசனங்கள் (உன் காதல்).
– நீரோடைமகேஷ்
2012 April
Manam Koththip Paravai
Than Kaathali Oru Maadal Azhagi Aval Thanaku Kidaitha Vaippukkaaga Kaathalai Perithagak Karuthaamal, Kaathalan Ennangalai Mathikkaamal, Than Vazhiyil Pokiraal.
Unnai Thaan Un Vazhakkkai Vazhndhu Kondirukiradhu.
Panam Kanda Paathaiyil Poravale !.
Parandhu Unvazhip Payanam Selkiraai.
முன்னுரை இல்லாவிட்டாலும் கவிதையின்
உள்ளுணர்வை மிக த் தெளிவாகப் புரிந்துகொள்ளும்படி
படைக்கப்பட்ட கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்