நான் வாழ்ந்த சொர்க்க பூமி

மழலையாய், குறும்புக்கார சிறுவனாய், பள்ளிப்பருவ பாலகனாய் நான் வசித்த என் கிராமத்தைப் பற்றிய அனுபவங்களை உங்கள் முன்னே திரையிட்டுக் காட்டவே இந்த கவிதை வரிகள் naan vaazhntha sorkka boomi

naan vaazhntha sorkka boomi

என்னுடன் என்னை மிஞ்சும் நண்பர் கூட்டம் ! ! !
எங்களுக்காகவே படைக்கப் பட்டதென அறியாமல்
ஊரார் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட கொய்யா மரங்கள்
**************************************************
சாதிப்பிரிவினையை சாக்கடையில் போட்ட
நிலாச்சோற்றுப் படையல் ………

எங்கள் ஆரவாரத்தால் சூரியனை
மறந்து எங்கள் பக்கம் முகம்
திருப்பிய சூரியகாந்தி தோட்டம் ..

பால் மறந்த பாலகர்கள் எல்லாம்
பாலூட்டி வளர்த்த அனாதைப் பூனைக்குட்டிகள் …
ஐந்தறிவு சீவனும் அனாதையாக்கப் படாத
பூலோக சொர்க்கம் தந்த எங்கள் மழலைப் பருவ
நண்பர்கள் கூட்டம்…………….

மின் விளக்குகள் அரங்கேற்றிய
விட்டில் பூச்சிகளின் நடனம் …

வண்ணத்துப் பூச்சிகளை சங்கமித்த
தும்பைப் பூக்களின் தெருவோர அலங்காரம் ..

காகங்களுடன் கபடி விளையாடிய
மண்புழுக்கள் ! ! ஆம் அன்னப்பறவையாய்
எங்கள் ஊர் காகங்கள் வாழ்ந்த செழிமையான
காலமும் எங்கள் ஊர் அங்கமாய் ….

இன்று கனவில் கூட கண்டு ரசிக்க முடியாத
என் மழலைப் பருவ நாட்களை
எழுத இந்த வரைவலை போதாது நண்பர்களே………….
மகேஷ்கண்ணா …………………..

naan vaazhntha sorkka boomi

 – நீரோடைமகேஷ்

You may also like...

2 Responses

  1. Anonymous says:

    I like this lines so much. tell me how to post comments in tamil ..

    Superb

  2. mohamedkamil says:

    என்ன மகேஷ் கவிதை எல்லாம் எழுதி கலக்குறீங்க.
    வாழ்த்துக்கள்.