வார ராசிபலன் தை 18 – தை 24

தை மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal jan-31 to feb-06.

மேஷம் (Aries):

aries mesam


மேஷம்இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். குடும்பம் மகிழ்ச்சிகரமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். உடன்பிறப்புகள் உதவி செய்வார்கள். வாகனத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கலாம். பணியாளர்கள் மகிழ்ச்சிகரமாக தென்படுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் தொழில் சிறப்பாக அமையும். மாணவர்கள் கல்வியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் லாபத்தில் முடியும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். பிரயாணத்தில் மிதவேகம் பின்பற்றவும். வாகன செலவுகள் அதிகரிக்கலாம். கணவன் மனைவி உறவுகள் மேம்படும். பணியாளர்கள் உயர் பதவியை அடைவார்கள். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் பாக்கியசாலிகள் ஆக திகழ்வார்கள். மாணவர்கள் ஊக்கம் பெறுவார்கள். விவசாயம் நஷ்டமே அடையும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று துர்க்கை வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எதிலும் பொறுமையாக செயல்படவும். உடன்பிறப்புகள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவும். இந்த வாரம் பிரயாணம் செய்ய வேண்டாம். பணியாளர்கள் சிரமப்பட வேண்டி இருக்கும். வியாபாரத்தில் சற்று கவனமாக இருக்கவும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயத்தில் அதிக லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்து வருதல் நன்மை பயக்கும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். ஒரு சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .கடன் யாரிடமும் வாங்க வேண்டாம். புதிய சொத்து வகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் நல்ல சிறப்பு அடைவார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். செலவுகள் சற்று அதிகரிக்கும். வாகன செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் நன்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரம் நஷ்டம் அடையாது. கலைஞர் கவனமாக இருக்கவும். மாணவர்கள் சிரமப்பட நேரிடும். விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 
பரிகாரம்: திங்கட்கிழமை தினத்தில் சிவ வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு சீராக இருக்கும். வாகனத்தில் ஆதாயம் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படலாம். உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும். கலைஞர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் நல்ல உயர்வு அடைவார்கள். விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவர் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். புதிய மனை வாங்கும் யோகம் ஆமையும். செலவை சற்று கட்டுப்படுத்தவும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் முழு வெற்றி அடைவார்கள். வியாபாரம் லாபமே கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல உச்சம் அடைவார்கள். விவசாயத்தால் குடும்பத் தேவை பூர்த்தி செய்யப்படும்.
பரிகாரம்: கோமாதா வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். தர்ம காரியங்களுக்கு உதவி செய்வீர்கள். எதிலும் சிக்கன நடவடிக்கை தேவை. பயணத்தின் போது சற்று கவனம் தேவை. பணியாளர்கள் பணியாளர்கள் மத்தியில் செல்வாக்கு அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி அடைவார்கள். விவசாயத்தில் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளது.
பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்தால் நன்மை பயக்கும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். மனதில் நல்ல மகிழ்ச்சியை தோன்றும், பொருளாதாரம் மேம்பாடு அடையும், சேமிப்பு சற்று உயரும், புதிய வாகன யோகம் உள்ளது. பணியாளர்கள் உழைப்பில் வெற்றி காண்பார்கள். வியாபாரம் நஷ்டம் அடைய வாய்ப்பு இல்லை. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நன்மதிப்பைப் பெறுவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பம் சில குழப்பங்களை சந்திக்கும். பிரயாணத்தில் சற்று கவனமாக செயல்படவும். பொருள் வரவு சீராக இருக்கும். உடல் நலனில் சற்று அக்கறை தேவை. பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வீண் செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. பயணம் செய்ய வேண்டாம். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரம் நஷ்டம் அடையாது. கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் கவனமாக இருக்கவும். விவசாயம் காய்கறி சம்பந்தப்பட்ட விவசாயம் லாபம் அதிகரிக்கும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தனது பைரவர் வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். எதிலும் வெற்றியே காண்பீர்கள். வாகன செலவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி ஒன்று நடக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகள் வசம் சரண் அடைவார்கள். பணியாளர்கள் லாபம் அடைவார்கள். வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்டவை நல்ல வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவு பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். விவசாயத்தில் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
பரிகாரம்: லட்சுமி வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது – rasi-palangal jan-31 to feb-06.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

1 Response

  1. N. shanmugapriya says:

    நவகிரகத்தின் நல்லாசி அனைவருக்கும் கிடைக்கட்டும்….ராசி பலன் மிகுந்த பயன் அளிக்கிறது…