கவிதை தொகுப்பு 41

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் சிவராஜ் மணிவண்ணன், சக்திவேலாயுதம், ஜோதி பாய், தானப்பன் கதிர் மற்றும் கவி தேவிகா அவர்களின் கவிதை வரிகளை வாசிப்போம் – kavithai thoguppu 41

kavithai thoguppu 41

அழகோவியமே

நள்ளிரவில் மலரும்
அல்லி மலர்போல
நிலவொளியில் சிந்தும்
உன்செவ்விதழ் புன்னகை
அழகோ அழகு………
மயங்கி வீழ்ந்தநான்
மையல் கொண்டேனடி……
உன் மீது அழகோவியமே…….
உன்னுள் யாவுமே அழகு…

– கவி தேவிகா, தென்காசி


நீரோடைக்குள்
வீழ்ந்த நிலவு.
மீள் தர
அவதாரங்களாய்
மச்சங்கள்.
புதிய இதிகாசமோ
பூபாளமோ அன்று.
கொஞ்சம்
மீட்கும் இயல்பு
அவ்வளவே.! – kavithai thoguppu 41

– தானப்பன் கதிர்


நெல்லிக்காய்

அருங்கனி நெல்லி
தானே உண்ணாது
ஔவைக்கு கொடுத்தான்
அதியமான் அன்று
செந்தமிழ் நீடுவாழ!
கசப்பும் துவர்ப்பும்
உண்ட நாவுக்கு
தந்திடும் நெல்லி
தண்ணீர் பருக
சுவையரும்பு அறியும்
இனிப்பின் சுவையை!
இறைவன் ரசவித்தை
துன்பம் பின்வரும்
இன்பம் போல!
வைட்டமின்C நிறைந்த
ஏழையின் ஆப்பிள்
புகழ்பெற்ற நெல்லி
நிதமும் உண்ண
எதிர்ப்புசக்தி கூடும்!
ஆயுளும் நீளும்!

– ஜோதி பாய் புவனேஸ்வர்


மனப்பேசி

இமைகளை அற்புதமாய்
மூடிமூடித் திறக்கும்
கண்களெனும் புகைப்படக்கருவியை விடவா
அழகான புகைப்படங்களை
எடுத்து விடப்போகிறது
இந்த அலைப்பேசிகள் போன்ற
புகைப்படக்கருவிகள்…
புகைப்படங்கள்
மெமரி ஜிபிக்களில்
நிரம்பி முடிந்தால்
அது அலைப்பேசி!
புகைப்படங்கள்
நினைவலைகளால்
நிரம்பி வழியாமல்
சேர்ந்து கொண்டே
பேசிக்கொண்டு போனால்
அது அகப்பேசி!
அலைபேசியோடு மட்டுமல்ல
மனப்பேசியோடும்
மீண்டு.. மீண்டும்..
வாழ்ந்து கொள்வோம்!

– ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்


ஐ இரு திங்கள் அண்டம் காணாது …….
ஆழ்ந்த உறக்கத்தில்…….
அன்னை முகம் காண காத்திருந்தேன்……
கருவறையில்…….

ஓடி ஆடி….
ஒருவரோடு ஒருவர் கலந்து…..
நட்பரிந்து நற்குணம் பெற்று….
பருவ பலனை படித்து உணர்ந்தேன்…….
வகுப்பறையில்…..

வாழும் காலம் வதந்தமுர…..
காதல் பால் பருகி….
உருதுணை யான இனையோடு……
உற்றார் உறவு சூழ கரம் பிடித்தேன்…….
மணவறையில்……

பிறவி பொறுப்பு உணர்ந்து….
பிள்ளை போரு பெற்று….
தழைக்கும் வம்சம் தரணி ஆள….
தன் நலம் மறந்து…..
வாழையாய் வாழ்ந்தேன் …….
இல்லத்தறையில்………

காடு கான கடை பொழுதில்……
கண் நினைவு ஏயிதி நறையுற்று…..
நாடி தளர்ந்து…..
இறையடி நாட ….. – kavithai thoguppu 41
இன்னுயிர் விளக்கி உயர் துறந்தேன்…….
கல்லறையில்…….

– சிவராஜ் மணிவண்ணன்

You may also like...

2 Responses

  1. தி.வள்ளி says:

    கவிதைகள் அனைத்தும் அருமை ..தேனில் ஊறிய பலாச்சுளையாய்.. வாழ்த்துக்கள் கவிஞர்களே..

  2. கதிர் says:

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்