ஆலமரம் – விழுதுகளாய் வெற்றி
விழுதுகள் ஓய்ந்தாலும்காய்ந்து போவதில்லை ஆலமரம், அந்த கனவையே துயில் எழுப்பும் வல்லமையுள்ள நண்பனே போராடு ! விழுதுகளாய் வெற்றி உன்னை சுற்றி வளைக்கும் ! – நீரோடைமகேஸ்
விழுதுகள் ஓய்ந்தாலும்காய்ந்து போவதில்லை ஆலமரம், அந்த கனவையே துயில் எழுப்பும் வல்லமையுள்ள நண்பனே போராடு ! விழுதுகளாய் வெற்றி உன்னை சுற்றி வளைக்கும் ! – நீரோடைமகேஸ்
by Neerodai Mahes · Published May 8, 2010 · Last modified September 20, 2022
பிறப்பையும் இறப்பையும் இணைக்கும் கல்லறை கல்வெட்டின்நாட்கள் சொல்லும் , கருவில் சுமந்து அழகான வாழ்க்கை தந்தவளின் நினைவுகளையாவது சுமந்து கொண்டிருக்கிறேன்…. தயவு செய்து இடித்து விடாதீர்கள் !!!!!!! கல்லறை கூட தாய் அன்பை சொல்லும். – நீரோடை மகேஸ்
என்னை இந்த பூமி என்னும் நரகத்தில் தள்ளிவிட்ட இராட்சசி தான் என் தாய் ………………. -குப்பை தொட்டியில் போடப்பட்ட குழந்தையின் குமுறல்……… குப்பைதொட்டி மகவுக்காக மகேஷ் இன் வரிகள் ….. – நீரோடைமகேஷ்
நீ என் நினைவில் அவதரித்த நாள் முதல், உன் நினைவால் நான் எழுதும் வார்த்தைகள் யாவும் என் கவிதை ஏட்டில்அலங்காரப் பொருளாய் ! ! ! வெறும் அலங்காரப் பொருளாய் வைத்திராமல் எழுத்துகளையாவது உலகம் அறியட்டும் என் காதலின் ஆழம் புரிய.. – நீரோடைமகேஷ்
தடுமாற்றங்களின் பயணத்தில் அழகை ரசிக்கும் ஆடவனின் கண்கள் , அவளில் காந்தப்பார்வை படும்முன் தப்பித்துக்கொள்ள ,…….. தண்டனையாய் அவளைப் பார்க்காதது போல ஒரு நடிப்பின் தூண்டலில் …. இருப்பினும் அந்த அழகை , ஓவியமாய் தீட்டிவிடும் அவன் அகம் . இவண் ஓவியன் – நீரோடைமகேஷ்
ஒரு முறை வந்தால் அது கனவில் வந்த வானவில். தினம் தினம் கனவை அலங்கரித்தால் அது என் காதல் தேவதையே உன் கால்தடம் . இரவையும் நேசிக்கிறேன் கனவில் நீ வருவதால். – நீரோடை மகேஷ்