மண்ணைக்காக்கும் க(ம)ரங்கள்

நீரோடை வணக்கம் சில நாட்களுக்கு முன் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் கனத்த மழை பெய்தது இந்த மழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது வெள்ளத்தினால் பெருக்கெடுத்து ஓடிய நீர் அங்கே உள்ள வீடுகள் வீடுகளில் காணப்பட்ட தெருக்கள் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தையும் அடித்து சென்றது அதுமட்டுமல்ல கூடவே மண்ணரிப்பை மழை ஏற்படுத்தியிருந்தது மண் அரிப்பின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் வாழிடங்கள் அனைத்தும் சேதம் அடைந்து மண்ணுக்குள் புதைந்தன – mannai kakkum marangal

mannai kakkum marangal

சென்ற வாரத்தில் ஒரு நாள் ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட அந்த ஊரில் உள்ள மண் அரிப்பினால் அங்குள்ள வீடுகள் கடைகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன அங்கும் மண்சரிவு நிலச்சரிவும் ஏற்பட்டது

இந்த இரண்டு செய்திகளையும் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கலாம் அல்லது செய்தித்தாளில் படித்திருக்கலாம் இச்செய்திகள் நாம் கண்டு அல்லது படித்து கடந்து விடுவதற்கு அல்ல இவற்றைக் கடந்து அடுத்த செய்திகளை காண்பதற்கு படிப்பதற்கும் நாம் சென்று விடுவோம் ஆனால் ஒரு பாடத்தை கற்க நாம் மறந்திருப்போம்

ஆம் இந்த வெள்ளப்பெருக்கினால் மண்சரிவு நிலச்சரிவும் சந்தித்த இந்த ஊர்களில் ஒரு விஷயத்தை நாம் கூர்ந்து கவனித்தால் நமக்கு விளங்கும் இயற்கையின் அங்கமாகிய காடுகளில் உள்ள மரங்களை வெட்டி அதை மனிதனின் வாழ்விடம் ஆகிய நகரங்களாக மாற்றியதன் விளைவு தான் இது இயற்கையில் உயிர்களின் வாழிடம் என்பது ஒரு சூழ்நிலை மண்டலம் ஆகவே இருக்க வேண்டும் ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உற்பத்தியாளர்கள் முதல்நிலை நுகர்வோர்கள் இரண்டாம் நிலை நுகர்வோர்கள் இறுதியாகத்தான் மூன்றாம் நிலை நுகர்வோர்கள் இருக்கவேண்டும்

இங்கே குறிப்பிட்ட உற்பத்தியாளர்கள் என்பது சூழ்நிலை மண்டலத்தில் மரங்கள் சிறு செடிகள் கொடிகள் அனைத்தையுமே உள்ளடக்கியது இந்தத் தாவர கூட்டம்தான் காடுகள் என்ற இயற்கை வாழிடத்தை உருவாக்குகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் தோன்றிய மனித நாகரீகங்கள் ஒரு ஊரை உருவாக்கும் பொழுது அங்கே காடுகள் ஆறுகள் வயல்வெளிகள் இவற்றின் ஊடாக தான் மனிதர்கள் வதியும் வீடுகள் அமைக்கப்பட்டன இந்த அமைப்பு ஓரளவு இயற்கையை சார்ந்ததாக இருந்ததால் வெல்லமோ அல்லது பெருமழையும் ஏற்படும்பொழுது அந்த மரங்களும் வனங்களும் மண்ணரிப்பு ஏற்படாமலும் மண்ணை வேர்கள் என்ற தங்கள் கைகளால் பிடித்து வைத்திருந்தன

ஆனால் காலம் செல்ல செல்ல நகரமயமாதல் என்ற பெரிய வலையில் மனிதகுலம் விழுந்ததனால் காடுகளும் மரங்களும் அழிக்கப்பட்டதால் வெறும் வீடுகள் மட்டுமே இயற்கையில் நிகழ்வாக பெரு மழையின் வெள்ளத்தைப் தாக்குப் பிடிக்க இயலாமல் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படுகின்றன

Mannai Kakkum Marangal

இயற்கையை புரிந்து கொண்டு அதற்குத் தக அமைத்து வாழ வேண்டிய மனித இனம் இயற்கையை அழித்து அதனுடைய சீற்றத்துக்கு உள்ளாகிறது. ஒரு மரம் வெட்டப்படும் பொழுது அந்த மரம் மட்டும் அந்த மண்ணை விட்டு அகற்ற படுவதில்லை அந்த மரத்தின் கனிகளை உண்டு வாழ்ந்த சிறு விலங்குகள் அந்த மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த பறவைகள் அதன் கனியை உண்டு விதையை பல இடங்களுக்கும் சென்று அவை விதைத்த நிகழ்வுகள் என்று அனைத்துமே வெட்டப்பட்ட அந்த மரத்தோடு முடிந்து போகின்றன

அந்த மரம் வெளியிட்ட பிராணவாயு இனி அங்கு கிடைக்காமல் போகின்றது ஒருமரம் வெட்டப்படுவதால் இத்தனை இயற்கை நிகழ்வுகள் அழிகின்றது என்றால் ஒரு வானமே அழுகிறது என்றால் சூழ்நிலை மண்டலம் எந்த அளவுக்கு சேதமடைகிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது

சிந்திப்பதை நிறுத்தி விடாமல் இயற்கையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயமும் நமக்கு உண்டு இவற்றை செய்ய தவறினால் எங்கோ ஒரு நாட்டில் எங்கோ ஒரு ஊரில் நிகழும் இந்த வெள்ளம் மண்சரிவு நிலச்சரிவும் நாம் இருக்கும் ஊரிலும் ஏற்பட்டு நம்முடைய நமக்கும் அழிவைத்தரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற உண்மையை இயற்கை நமக்கு உணர்த்தும் நாளும் வரும் – mannai kakkum marangal.

– லட்சுமி பாரதி, திருநெல்வேலி

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    மிக அருமையான விழிப்புணர்வு தரும் பதிவு ..இக்காலத்திற்கு மிகவும் தேவையான ஒன்று கூட ..இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே இயற்கை பேரழிவுகளை தடுக்கலாம் என்பதை ஆசிரியர் அழகாக உணர்த்தி உள்ளார்..சகோதரி லக்ஷ்மி பாரதிக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *