ஆவணி மாத மின்னிதழ் (Aug-Sep-2020)
இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, மற்றும் ஆடி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – aavani matha ithal.
காட்டை குறிக்கும் தமிழ் பெயர்கள்
பல சொல் ஒரு பொருள்…
அடவி, அரண், அண்டம், அரில், அறல், ஆரணி, இயவு, இறும்பு, கால், கானகம்
வனம், வியர், விடர், சுரம், தில்லம், பதுக்கை, பொதி, பொற்றை, புரவு, பொழில், பழுவம், பொச்சை, முளரி, முதை, மிளை, முளி.
வனத்தின் பசுமை வண்ணம் (கவிதை 1)
அதில் மனமிசைவது திண்ணம்…..
உடலின் உள்ளுறுப்பாக கணையம்
புவியின் உயிர்ப்பாக கணையம்…..
பூவுலகை அலங்கரிக்கும் விடர்…
அழிந்தால் நேர்ந்திடும் இடர்….
வஞ்சனையின்றி வளங்கொண்ட வல்லை….
சுரம்போல உற்றதோழன் இங்கில்லை…..
திகட்டாது தீத்திக்கும் தில்லம்….
பலநூறு பயன்பெறும் இல்லம்….
ஆச்சரியம் அடங்கிய பதுக்கை…
பொழிலாக பொற்றையாக புரவாக….
பொச்சையாக பழுவமாக பொதியாக….
மிளையாக முளரியாக முளியாக…
செந்தமிழில் பலபெயர்கள் கொண்ட…
பார்போற்றும் பசுமையான முதை…
பாதுகாப்போம் இக்கனமே இதை…. – கவி தேவிகா, தென்காசி.
உணவு சார்ந்த பழமொழிகள்
- நான்கு மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம்.
- காட்டில் புலியும் வீட்டில் புளியும் ஆளைக் கொல்லும்.
- சீரகம் இல்லா உணவு சிறக்காது.
- செவ்வாழை வாழ்வை கூட்டும்.
- உடல் மெலிவுக்கு பப்பாளி அவசியம்.
- ஊளை சதைக்கு அருகம்புல் சாறு எமன்.
- மூலத்தை நிர்மூலமாக்க கொய்யா
- சுக்கு பொடிக்கு சுறுசுறுப்பு இலவசம்.
- நெல்லிக்காய் சாறுக்கு விக்கல் சிக்கலின்றி தீரும்.
- வயிற்று பூச்சிக்கு பாகற்காய் சிறந்த பூச்சிக்கொல்லி.
- இஞ்சிக்கு மிஞ்சிய இயற்கை வஞ்சி இல்லை.
- சோகைக்கு தேவை சோயா
- பற்களுக்கு உறுதி மாதுளை – ஏஞ்சலின் கமலா, தமிழ் ஆசிரியை, மதுரை.
மாலை பொழுதின் மயக்கத்தில் (கவிதை 2)
இரையைத் தேடிவிட்டு தன் கூட்டை நோக்கி
பயணிக்கும் பறவையினங்கள் வானிலே சுற்றிவர
மெல்லிய காற்று மெல்லிசை மன்னரின்
இன்னிசையை போல என் மீது வருட.,
மேகத்தை முத்தம் இட்டு மறைந்த சூரியன்
அதைப்பார்த்த மயக்கத்தில் சுழன்ற பூமி!
வானத்து மேகங்களும் மெளனமாய் நகர்ந்தன
மாலை பொழுதின் மயக்கத்தில்!
நிலவின் ஒளி பட வெட்கப்பட்டு சிவந்தது சூரியன்!
நிகழ்வுகள் நிகழ்ந்தவண்னம் அந்திப்
பொழுதும் சாய்ந்தது!!! – பிரகாசு.கி அவனாசி
தேனீக்களுக்கும் உலக பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு ?
இவ்வுலகில் உணவு சங்கிலிக்கு உயிரோட்டம் கொடுப்பதே தேனீக்கள் தான்.
தேனீக்கள் இல்லாமல் இவ்வுலகில் நாம் என்ன செய்துவிடமுடியும்? ஒரு செடியில் காய் காய்க்க வேண்டுமெனில் அதில் மகரந்த சேர்க்கை நடைபெற வேண்டும். சுமார் 70% பயிர்களில் தேனீக்களால் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. இந்த 70% பயிர்கள் தான் இவ்வுலகின் 90% உயிர்களுக்கு உணவளிக்கிறது.
ஒரு பேச்சுக்காக இன்றுடன் அனைத்து தேனீக்களும் ஓய்வு எடுத்துக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். பிறகு என்னவாகும்? வெறும் மூன்றே மாதங்களில் உலகின் அனைத்து பயிர் தொழில்களும் வீழ்ச்சியடையும். காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி வெறும் மூன்றே மாதத்தில் பாதியாகக் குறைந்துவிடும்.
இந்தியாவைத் தவிர்த்த பிறநாடுகளில் கால்நடைகளுக்கு முழுநேர உணவாக குதிரைகொள்ளு கொடுக்கப்படுகிறது. தேனீக்களால் மகரந்த சேர்க்கை நடத்திவைக்கப்படும் அது இல்லாமல் போகுமெனில் உலக மக்கள் வருடத்தில் சராசரியாக உண்ணும் முப்பத்தைந்து கிலோ இறைச்சி கிடைக்காமலோ அல்லது குறையவோ வாய்ப்பிருக்கிறது. உணவு சங்கிலி தடைபட்டுவிடும். சில மாதங்களிலேயே அனைத்து விவசாயிகளும் தங்களது பயிர்களைத் தொலைத்துவிட்டு நெல்லையும் சோளத்தையும் பயிரிட வேண்டியிருக்கும். ஏனென்றால் இவை காற்றின் மூலம் மகரந்த சேர்க்கை நடக்கும் பயிர்கள். இவை தேனீக்கள் இல்லாமலேயே பிழைத்துக்கொள்ளக்கூடியவை.
அனைத்து உயிரினங்களின் உணவு முறை மாறும். சத்துக் குறைபாடு ஏற்படும். அதனுடன் மருத்துவச் செலவு அதிகரிக்கும். அரிசியையும் சோளத்தையும் மட்டுமே நம்பிக்கொண்டிருக்கையில் இதற்கான தேவையும், பற்றாக்குறையும் அதிகரிக்கும். உணவிற்கும் மருத்துவத்திற்கும் உண்டாகும் செலவுகளால் பொருளாதாரமே சிதையும்.
இது அவ்வளவு எளிதில் சரி செய்யக்கூடிய ஒன்றா? என்றால் இல்லைதான். ஆனால் பல பூச்சி, பறவை மற்றும் விலங்கினங்களை நாம் வாழும்காலங்களிலேயே தொலைத்திருக்கிறோம். அப்படி ஒருவேளை தேனிக்களும் அழிந்து போனால் மேற்சொன்னவை நடக்கும். மனிதன் ஆகிய நாம் இயற்கையின் உணவு சங்கிலியில் ஒரு அங்கம். அங்கம் மட்டுமே!
கோதுமை சம்பா பாயசம்
தேவையான பொருட்கள்:
கோதுமை சம்பா – 250 கிராம்
கட்டி வெள்ளம் – 400 கிராம்
தேங்காய் – 1
முந்திரி, திராட்சை – தேவையான அளவு
செய்முறையை நீரோடையின் வளையொலி காணொளியில் பார்த்து பயன்பெறுங்கள்.
ஆவணி பிறந்ததும் இவ்வளவு விஷயங்கள் திருப்தியாக தெரிந்து கொண்டோம் நன்றி
இனிப்போடு தொடங்கிய இம்மாத நாளிதழ்… வனத்தின் தேனோடு தித்திக்கிறது…. வாழ்க வளர்க…..
ஒரு மாலைப் பொழுதின் மயக்கத்திலே, வனமகள் அழகையும், அடவியின் எண்ணிலடங்கா பெயர்களையும்,உணவின் சுவை கூட்டும் இனிய பல பழமொழிகளையும், சுறுசுறுப்பான தேனீக்களுடன், இனிமையாய் ஒரு பாயாசம் அருந்தி, ஆவணி மாதத்தை அமர்க்களமாய் தொடங்கிவிட்டோம்..
நிறைய விஷயங்கள்….அருமை!
ஆவணி மாத இதழ் மிகவும் அருமை
காட்டை குறிக்கும் பெயர்கள் –அற்புதம்
உணவு சார்ந்த பழமொழிகள் –அருமை
தேனீக்கள் பற்றியசெய்தி இதுவரை நாங்கள் அறியாதது
கோதுமை பாயசம் இனித்ததைப் போல் ஆவணி மாத இதழ் மிகவும் இனித்தது நன்றி
கவிதேவியின் கவி மழை அபாரம். ஆவணி மாதம் மங்களகரமாய் ஆரம்பம்.
வாழ்க வளமுடன். புகழ்பெருகி ஓடட்டும்
நம் நீர் ஓடையில்.
தேனீக்கள் பற்றிய செய்திகள் படித்தேன்..வியந்தேன்…
ஆஹா வித்தியாசமான மின் இதழ்.உலகம் எங்கே போய் கொண்டு இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
தேனீக்கள் பற்றிய செய்தி அருமை.