மலடி – விந்து மாற்றத்தை கருவாக வைத்து எழுதப்பட்ட கதை
அபிராமிக்கு நித்திரை வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது. தலையணை கண்ணீரில் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த டிஜிடல் கடிகாரத்தைப் பார்த்தாள். அது காலை இரண்டு மணி காட்டியது. பக்கத்தில் தேவனும் அவளைப் போல் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்ததை அவளால்...


