கார்த்திகை மாத மின்னிதழ் (Nov-Dec 2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – karthigai matha ithal.

karthigai matha ithal

தசரதர் ஏன் 60,000 பெண்களை திருமணம் செய்தார்

தந்தை மரணத்திற்கு பழிவாங்க சத்ரிய பரம்பரையின் 21 தலைமுறை அரசர்களை அடியோடு வெட்டி வீழ்த்த போவதாக சபதம் ஏற்று, அதன்படி செய்து வந்தார் பரசுராமன். அந்த சமயத்தில் அயோத்தி நகரை ஆண்டு வந்த தசரத சக்கரவர்த்தி பல போர்களில் வெற்றி பெற்று வீரராக இருந்தாலும், பரசுராமனின் போர்த்திறன், சிவபெருமானிடம் தவமிருந்து பெற்ற கோடாரி மற்றும் தவசக்தி ஆகியவற்றை எதிர்க்க இந்த பூமியில் எந்தத் வீரனும் இல்லை என்று எண்ணினார் – karthigai matha ithal.

குறிப்பாக புதிதாக திருமணம் புரிந்த எந்த ஒரு அரசனையும் பரசுராமன் போருக்கு அழைக்காமல் விட்டு செல்வது வழக்கம் இந்த பரசுராமனின் பலவீனத்தை அறிந்து கொண்ட தசரத சக்கரவர்த்தி, பரசுராமர் தன்னை போருக்கு ஒவ்வொருமுறை அழைக்க வரும்போதும் ஒரு திருமணம் புரிந்து கொண்டு புது மனைவியுடன் காட்சியளிப்பார். பரசுராமரும் அவரை ஆசிர்வாதம் செய்து விட்டு சென்று விடுவார்.

நான் உயிருடன் இருந்து தன் நாட்டை காக்கும் பொருட்டு இத்தனை திருமணங்கள் புரிந்ததாக புராணங்கள் சொல்கிறது. தனது சொந்த விருப்பத்திற்காக அவர் இத்தனை திருமணங்களை செய்யவில்லை என்பது இந்த பதிவின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.


நீரோடையின் முதல் நூல் விமர்சனம் வலையொளி பதிவு

நெருப்பு விழிகள் ம.சக்திவேலாயுதம் அவர்களின் நான்காம் புத்தகம் சிறுகை அளாவிய கூழ் – வலையொளி பதிவு


கவிதை தொகுப்பு 23

மணிகண்டன் மற்றும் பொய்யாமொழி அவர்களின் கவிதைகள் இந்த மாத பதிவில் இடம்பெற்றுள்ளது.

சிற்றோடை வாழ்வு

நதியின் தளத்தில்
திசைப்புல் ஒன்று
ஓயாது வழிகாட்டுகிறது
குழல் களைத்து
திசை திருப்பும்
செங்காத்து காலத்தில்
உடல் வற்றி
ஈரத்தோடு
இனம் வளர்த்து
மன்றாடுகிறது

பருவமாற்றத்தில்
இயற்கையின்
உதிரப்போக்கோடு
புனலேறும் நன்நாளுக்காக
காத்திருக்கிறது
அதன் பிள்ளைகள்.

– பொய்யாமொழி.பொ


என்னை கடந்து சென்றவர்கள்
ஏராளம்,
காரணம் புரியாமல் பார்த்தவர்கள் பலகாலம்,
கோடை வெயில் எனக்கு ஓர் போர்க்காலம்,
கொட்டும் மழை தான் எனக்கு
வசந்த காலம்,
முத்தமிடம் பனி ஓர்
கார்காலம்,
கொஞ்சம் பொறுத்திருங்கள்
சிலகாலம்,
புத்துயிர் பெற்று பூண்டிடுவேன் விழாக்கோலம்…
இப்படிக்கு – நெடுஞ்சாலைப் பூக்கள்

– மணிகண்டன் சுப்ரமணியம்


முக்கிய விரத தினங்கள்
அமாவாசை - கார்த்திகை 29 (14-12-2020)
பௌர்ணமி - கார்த்திகை 14 (29-11-2020)
பிரதோஷம் - கார்த்திகை 12 (28-11-2020) 
மற்றும் கார்த்திகை 27 (12-12-2020) - karthigai matha ithal

You may also like...

7 Responses

  1. உஷாமுத்துராமன் says:

    அருமையான பதிவு

  2. கதிர் says:

    புரணப்பின்னணி மற்றும் கவிதைகள் அருமை

  3. மாலதி நாராயணன் says:

    அருமையான தகவல்

  4. தி.வள்ளி says:

    எல்லா பதிவுகளுமே அருமை புராண பதிவு புதிய தகவல்களை அறியத் தருகிறது..வலையொளி நூல் விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் புதிய முயற்சிகள்.

  5. Kavi devika says:

    அருமை . அனைத்து படைப்புகளும்…. வாழ்த்துகள்…

  6. நிர்மலா says:

    தசரதரை பற்றிய தகவல் ஒரு புதிய கோணத்தை காட்டுகிறது.
    நூலை பற்றிய வலையொளி பதிவு அருமை.
    வாழ்த்துகள்.
    முயற்சிகள் தொடரட்டும்.

  7. Rajakumari says:

    கார்த்திகை மாதம் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் படித்து முடித்தபின் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம் நன்றி