புகையிலை ஒழிப்பு தின கவிதை

என்னவள் முத்தமிட்ட கணம்
என் உதட்டில் ஒட்டிக் கொண்ட
அவள் உதட்டுச் சாயம் சொன்னது
ஆயிரம் சிகரெட்டுகளை
முந்திக்கொள்ள விட்டுவிட்டேனே
என்று …….
உணர்வுகள் தொட்ட உள்ளம் என்றும்
தொடாது புகையிலையை…..
விழிப்புணர்வு :
காம்பின் நுனியில் இருந்து தவறி விழுந்த
மலரின் மௌனம் தான் புற்று நோயாளியின் வாழ்க்கை..
கொடியில் அழும் மகரந்தங்கலாய்,
நம்மில் சிலருக்கு வாழும் போதே
அழுகும் நுரையீரல் நலம் விசாரிப்புகளில்….

world no tobacco day tamil kavithai
Note :

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து 1987 ம் ஆண்டு மே மாதம் 31 ஆம் நாளை சிறப்பு நாளாக அறிவித்தது.

புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் 2020ல் 16 லட்சம் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இன்றைக்கு புகைப்பதை ஆண்மையின் கம்பீரமாக கருதும் இளைய தலைமுறையினர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மகேஷ்……..
மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் …..

You may also like...

1 Response

  1. ராஜசேகர் says:

    தங்களது கவிதை மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்