பெண்மை – கவிதை பதிவு 2
எப்படி எழுத..எதை கொண்டுணர்த்த…வானத்தை தாளாக்கி,சமுத்திரத்தை மையாக்கிஉலகின் வாழ்நாளை மொத்தமாக கடன் வாங்கிஎழுதினாலும் நிறையுமா… இது இருபதாம் நூற்றாண்டுஇருந்தும் பெண்ணின்றிஇம்மண்ணிருக்குமா… அதிகாலை எழுவதில்எந்நாளும் வெற்றி..அடுத்த நொடி சுறுசுறுப்புகடைசி வரை விறுவிறுப்புஉமையாள் உமக்கே சாத்தியம்..பெண்ணிற்கு ஆண் இணையல்ல இது சத்தியம்.. சமைத்ததை அருந்திடும்சர்வாதிகாரம் சமைந்த பொழுதே விட்டொழித்துசமையலறையிலே வாழ்ந்துசமைத்தே உண்கிறாள் சாகும் வரை..அதிகாலை இருட்டிலும்கொலுசும், வளையலும் மேளதாளமிட்டும்...