Author: Neerodai Mahes

Ninaivugal Sumandhapadi

நினைவுகள் சுமந்தபடி

உன் நினைவுகளை சுமந்து கொண்டு செத்துவிடக் கூட விருப்பம் இல்லையடி…… ஏன்  என்றால் நான் செத்த பிறகு என் உடல் உன்னை விட்டு அந்த கல்லறையை, சுமந்து கொண்டு இருக்கும் என்பதால். நினைவுகள் சுமந்தபடி – நீரோடைமகேஷ்

en noolagame neethaanadi

என் நூலகமே நீதானடி

நூலகத்தில் நாள் முழுவதும் தேடியும் இல்லாத அந்த புத்தகம். நினைவில் அந்த புத்தகத்தின் பெயர் இருந்தாலும் என் கண்கள் உன் பெயர் கொண்ட புத்தகத்தையே தேடிய வண்ணம் . என் நூலகமே நீதானடி….  – நீரோடைமகேஷ்

Kadhalai Varunithal

காதலை வருணித்தல்

காத்திருப்பின் Kadhalai Varunithal தூண்டலில் தான் இன்றைய காதல் !!! காதலை வருணித்தபடியே. காதலை சில சமயம் காத்திருப்புகளில் வைக்கும் நிமிடங்களை சில சமயம் வருணித்தபடியே. Kadhalai Varunithal  – நீரோடைமகேஷ்

ninaivil avatharithai

நினைவில் அவதரித்தாய் !

நீ என் நினைவில் அவதரித்த நாள் முதல், உன் நினைவால் நான் எழுதும் வார்த்தைகள் யாவும் என் கவிதை ஏட்டில்அலங்காரப் பொருளாய் ! ! ! வெறும் அலங்காரப் பொருளாய் வைத்திராமல் எழுத்துகளையாவது உலகம் அறியட்டும் என் காதலின் ஆழம் புரிய..    – நீரோடைமகேஷ்

thadumaatram kavithai

தடுமாற்றம்

தடுமாற்றங்களின் பயணத்தில் அழகை ரசிக்கும் ஆடவனின் கண்கள் , அவளில் காந்தப்பார்வை படும்முன் தப்பித்துக்கொள்ள ,…….. தண்டனையாய் அவளைப் பார்க்காதது போல ஒரு நடிப்பின் தூண்டலில் …. இருப்பினும் அந்த அழகை , ஓவியமாய் தீட்டிவிடும் அவன் அகம் . இவண் ஓவியன்  – நீரோடைமகேஷ்

poradu thannambikkai kavithai

போராடு

வெறும் கரைதனில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் மீன்களாய் நீ, போராட அலைகள் உனக்கு சவால் விடும் நேரத்திலும் கூட ? போராடு தோழனே !! – நீரோடைமகேஷ்

avalaippen yematram

ஏமாற்றத்தில் அவலைப்பெண்

உன்னால் வந்த வெட்கத்தின் அர்த்தங்கள் அறியும் முன்னரே , வேதனையின் முகவரிகள் தந்தாயே !!!!!! இதுதான் காதலின் வேகமோ ?  – நீரோடைமகேஷ்

amma kavithai thaayullam

அம்மா

கருவில் உருவெடுத்த மகவை Amma Kavithai Thaayullam சிறை வைக்க முடியாதது போல ! அடிமனதில் ஆட்கொண்ட அன்பை அப்படியே தருவது தாயுள்ளம் மட்டுமே !  – நீரோடை மகேஷ்

aval kangal kavithai

அவள் கண்கள்

விழிகள் தான் பார்வைதரும் , ஆனால் அவள் விழிகள் மட்டும் என் கண்களையே கவர்ந்து விட்டதே . பார்வை படும் தூரமெல்லாம் அவள் பிம்பமாய் !  – நீரோடை மகேஷ்

kanavil nee varuvathaal

கனவில்

ஒரு முறை வந்தால் அது கனவில் வந்த வானவில். தினம் தினம் கனவை அலங்கரித்தால் அது என் காதல் தேவதையே உன் கால்தடம் . இரவையும் நேசிக்கிறேன் கனவில் நீ வருவதால்.  – நீரோடை மகேஷ்