Author: Neerodai Mahes

thadumaatram kavithai

தடுமாற்றம்

தடுமாற்றங்களின் பயணத்தில் அழகை ரசிக்கும் ஆடவனின் கண்கள் , அவளில் காந்தப்பார்வை படும்முன் தப்பித்துக்கொள்ள ,…….. தண்டனையாய் அவளைப் பார்க்காதது போல ஒரு நடிப்பின் தூண்டலில் …. இருப்பினும் அந்த அழகை , ஓவியமாய் தீட்டிவிடும் அவன் அகம் . இவண் ஓவியன்  – நீரோடைமகேஷ்

poradu thannambikkai kavithai

போராடு

வெறும் கரைதனில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் மீன்களாய் நீ, போராட அலைகள் உனக்கு சவால் விடும் நேரத்திலும் கூட ? போராடு தோழனே !! – நீரோடைமகேஷ்

avalaippen yematram

ஏமாற்றத்தில் அவலைப்பெண்

உன்னால் வந்த வெட்கத்தின் அர்த்தங்கள் அறியும் முன்னரே , வேதனையின் முகவரிகள் தந்தாயே !!!!!! இதுதான் காதலின் வேகமோ ?  – நீரோடைமகேஷ்

amma kavithai thaayullam

அம்மா

கருவில் உருவெடுத்த மகவை Amma Kavithai Thaayullam சிறை வைக்க முடியாதது போல ! அடிமனதில் ஆட்கொண்ட அன்பை அப்படியே தருவது தாயுள்ளம் மட்டுமே !  – நீரோடை மகேஷ்

aval kangal kavithai

அவள் கண்கள்

விழிகள் தான் பார்வைதரும் , ஆனால் அவள் விழிகள் மட்டும் என் கண்களையே கவர்ந்து விட்டதே . பார்வை படும் தூரமெல்லாம் அவள் பிம்பமாய் !  – நீரோடை மகேஷ்

kanavil nee varuvathaal

கனவில்

ஒரு முறை வந்தால் அது கனவில் வந்த வானவில். தினம் தினம் கனவை அலங்கரித்தால் அது என் காதல் தேவதையே உன் கால்தடம் . இரவையும் நேசிக்கிறேன் கனவில் நீ வருவதால்.  – நீரோடை மகேஷ்

Kaathal kavithai thoguppu

என் முழுநிலவுக்காக

முகம் தெரியாத முழுநிலவுக்காக !!! தினம் தினம் தேய்பிறையாகும் என் நினைவுகள். நினைவுகள் தேய்ந்தாலும், நான் நினைப்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். En Muzhu Nilavukkaaka Kavithai  – நீரோடை மகேஷ்

kavithaiyai thedi oru payanam

கவிதையைத் தேடி ஒரு பயணம்

என் தேவதையால் தொலைந்து போன வார்த்தைகளை தேடி கனவில் கால் பதிக்கிறேன். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் இதோ வந்துவிடுகிறேன் . கவிதையைத் தேடி ஒரு பயணத்தில்.  – நீரோடை மகேஷ்

thithikkum kavithai

தித்திக்கும்

உன்னை நினைத்து அழும்போது வரும் கண்ணீர் கூட கரும்பைப் போல தித்திக்கும் !! ஏன் என்றால் நினைவில் நீ இருப்பதால் …….  – நீரோடை மகேஷ்

neerodaimahes kavithai

மகேஷ்கண்ணா

தினம் தினம் நூறு கவிதைகள் உன்னால் உனக்காக . உன்னிடம் அதை காட்ட? உன் மனம் காயப்படக்கூடாது என்ற பயம், என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் , அதனால் இந்த வரைவலையில் விட்டு செல்கிறேன்.  – நீரோடைமகேஷ்