Author: Neerodai Mahes

poradu thozhane

போராடு தோழனே

உன் விரல் நுனியில் உள்ளஅழுக்கு கூடஉன் கைபடும் மணலின் உரமாக மாறட்டும். பார்வை படும் மேடு பள்ளங்களில் உன் வெற்றி மறைந்திருக்கலாம், போராடு தோழனே ! – நீரோடைமகேஸ்

idhayathil vetridam

இதயத்தில் வெற்றிடம்

உன் கால்களில் உரையாடும் கொலுசு மணிகள் கூட ,உன் முகம் பார்க்க முடியாத சோகத்தில் கிடக்க… என் இரு விழிகள் மட்டும் நாள்தோறும் உன் பூ முகம் பதித்து செல்கிறது….. பார்வையில் படமெடுத்து புகைப்படமாய் உன் முகம் மட்டுமே என் இதயக் கூட்டில் ……………. உன் இதயத்தில்...

Yaar Kadavul

யார் கடவுள் ?

நாத்திகனைக் கூடகடவுளாக பார்க்கும்உலகம். தனக்கு, தானே கடவுள் !.!.! தனக்கு, தானே நாத்திகன் !.!.! எனபது தெரியாமல் !!!! – நீரோடை மகேஸ்

kallarai kooda thaiyanbai sollum

கல்லறை கூட தாய் அன்பை சொல்லும்

பிறப்பையும் இறப்பையும் இணைக்கும் கல்லறை கல்வெட்டின்நாட்கள் சொல்லும் , கருவில் சுமந்து அழகான வாழ்க்கை தந்தவளின் நினைவுகளையாவது சுமந்து கொண்டிருக்கிறேன்…. தயவு செய்து இடித்து விடாதீர்கள் !!!!!!! கல்லறை கூட தாய் அன்பை சொல்லும். – நீரோடை மகேஸ்

Kuppai Thotti Kural

குப்பை தொட்டி குரல்

என்னை இந்த பூமி என்னும் நரகத்தில் தள்ளிவிட்ட இராட்சசி தான் என் தாய் ………………. -குப்பை தொட்டியில் போடப்பட்ட குழந்தையின் குமுறல்……… குப்பைதொட்டி மகவுக்காக மகேஷ் இன் வரிகள் …..  – நீரோடைமகேஷ்

Ninaivugal Sumandhapadi

நினைவுகள் சுமந்தபடி

உன் நினைவுகளை சுமந்து கொண்டு செத்துவிடக் கூட விருப்பம் இல்லையடி…… ஏன்  என்றால் நான் செத்த பிறகு என் உடல் உன்னை விட்டு அந்த கல்லறையை, சுமந்து கொண்டு இருக்கும் என்பதால். நினைவுகள் சுமந்தபடி – நீரோடைமகேஷ்

en noolagame neethaanadi

என் நூலகமே நீதானடி

நூலகத்தில் நாள் முழுவதும் தேடியும் இல்லாத அந்த புத்தகம். நினைவில் அந்த புத்தகத்தின் பெயர் இருந்தாலும் என் கண்கள் உன் பெயர் கொண்ட புத்தகத்தையே தேடிய வண்ணம் . என் நூலகமே நீதானடி….  – நீரோடைமகேஷ்

Kadhalai Varunithal

காதலை வருணித்தல்

காத்திருப்பின் Kadhalai Varunithal தூண்டலில் தான் இன்றைய காதல் !!! காதலை வருணித்தபடியே. காதலை சில சமயம் காத்திருப்புகளில் வைக்கும் நிமிடங்களை சில சமயம் வருணித்தபடியே. Kadhalai Varunithal  – நீரோடைமகேஷ்

ninaivil avatharithai

நினைவில் அவதரித்தாய் !

நீ என் நினைவில் அவதரித்த நாள் முதல், உன் நினைவால் நான் எழுதும் வார்த்தைகள் யாவும் என் கவிதை ஏட்டில்அலங்காரப் பொருளாய் ! ! ! வெறும் அலங்காரப் பொருளாய் வைத்திராமல் எழுத்துகளையாவது உலகம் அறியட்டும் என் காதலின் ஆழம் புரிய..    – நீரோடைமகேஷ்

thadumaatram kavithai

தடுமாற்றம்

தடுமாற்றங்களின் பயணத்தில் அழகை ரசிக்கும் ஆடவனின் கண்கள் , அவளில் காந்தப்பார்வை படும்முன் தப்பித்துக்கொள்ள ,…….. தண்டனையாய் அவளைப் பார்க்காதது போல ஒரு நடிப்பின் தூண்டலில் …. இருப்பினும் அந்த அழகை , ஓவியமாய் தீட்டிவிடும் அவன் அகம் . இவண் ஓவியன்  – நீரோடைமகேஷ்