Author: Neerodai Mahes

vetri vilaichal poraadu thozhane

வெற்றி விளைச்சல் – போராடு தோழமையே

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தினம் தினம் நடக்கும் வெற்றியை நோக்கிய போராட்டம், சிலர் வெல்வதும், சிலர் போராடிய நிகழ்வுகளுடன் கனவில் கால்பதித்து உறங்குவதும் வழக்கம் தானே !பார்வை படும் தூரம்வரை உழைப்பின் வியர்வைச் சாரலை தூவச்செய்.. கையில் எடுக்கும் சிறு துகளையும் துயில் எழுப்பி வெற்றிக்கு வித்தாக்கு !...

thanneer kodu thaagam edukkirathu

தண்ணீர் கொடு (காவிரி)

தண்ணீர் கொடு தாகம் எடுக்கிறது.நீரின்றி சருகாய்ப் போன எத்தனையோ ப(உ)யிர்கள். மேகக் கடன்காரியிடம் காதல் தோல்வியுற்ற விரிசல் விழுந்த வானம் பார்த்த பூமி. எத்தனை நாள் வெறும் புழுதிக் காட்டில் உழவு செய்ய ? வானத்திடம் தன் மேனிப்பரப்பை காட்டாத வயல்வெளி நிலப்பரப்பு, இங்கே ஆடையிழந்து நிர்கதியற்று…....

kavalai kollaathe kanmaniye

கவலை கொள்ளாதே கண்மணியே

சில நொடிகள் நீடிக்கும் உன் மௌனம் கூட பிறப்பின் வலியைத் தருகிறது.கவலை கொள்ளாதே கண்மணியே கைபிடிப்பேன், கணவனாக . எதை இழந்தாய் வருத்தப்பட, எதை இழக்கப் போகிறாய் பயப்பட, நமக்குள் நம்மை இழந்ததைத் தவிர…. எல்லாம் உனக்காக படைக்கப் பட்டதாக்குவேன்…

travell with lover uyiril uraithadi

உயிரில் உரையுதடி

உன்னோடு நடக்கையில், பேருந்தில் பயணிக்கையில் என்னுள் பயணித்த வரிகள் இதோ,கை வீசி, தோள் உரசி என்னுடன் நீ நடக்கையில், நம் விரல்கள் மோதிக்கொள்ளும் விபத்துகளால் என் பனிமலைக்குள் பூகம்பம். தூக்கத்தில் நான் புலம்பிப் புரள்கையிலும் என் கைவிரல்கள் உன் கை தேடுதே !!! என்னருகே நீ அமர்ந்த அந்த பேருந்து...

soolnilai sudharippugal

சூழ்நிலை சுதாரிப்புகள்

உன் மனம் எனும் பட்டாம்பூச்சிக்கு பயணத் தடத்தின் தடங்கல்களுக்கு பதில் சொல்லத் தெரியாது.தனியொரு பட்டாம்பூச்சி போல நடு வானின் வெப்பத்தை சுதாரிக்க முயற்சிப்பதைவிட இடம் அறிந்து போராடு . போராடித் தோற்றாலும் உன் வியர்வைத் துளிகள் காலத்தை வெல்ல முயற்சிக்கும். காகிதப்போர் புரிந்து கடலையும் வற்ற வைக்கலாம்....

uyirai adagu vaithu kadhal kavithai

உயிரை அடகு வைத்து

நீ நதி ஓடும் பாதையா நதி தேடும் பாதையா ?என் உயிரை அடகு வைத்து உன் காதலை வாங்கினேன். கவிஞனாக ஓராயிரம் கவிதைகள் படைத்தாலும், காதலிக்க உன்னிடம்தான் கற்றுக்கொள்ள முடியும். பிரம்மனின் கனவுகளும் தொடாத கற்பனை நீ, ஆனால் என் நிஜத்தில் என் வாழ்க்கையில். – நீரோடைமகேஸ்

aayiram kaadhaligal

ஆயிரம் காதலிகள்

எந்த நிகழ்வுகளும் எந்த பெண்ணும் என்னை கவிதை எழுத வைக்கவில்லை கவிஞனாக எனக்கு ஆயிரம் சந்தர்ப்பங்கள் . இதையே ஒரு காதலை பொருளாக கொண்டு எழுதினால், “என் காதலிகள் யாரும் என்னை கவிதை எழுத வைக்கவில்லை கவிஞனாக எனக்கு ஆயிரம் காதலிகள்.. அதில் வானத்தை வட்டமிடும் அந்த...

anbirkku aathaaram nee thaanadi ammu

அன்பிற்கு ஆதாரம் நீதானடி

துடிக்கும் இதயம் தன் சுவர்களில் உன்னை வரைந்து வைக்கிறது.காலப்பெருவெளியில் கரைந்து போகும் சிறு வரலாற்றுச் சுவடு இல்லை நீ …. என் வரலாற்றுப் பக்கங்களும் நீயே. ஆயிரம் முறை பிறந்து உன்னை காதலித்தாலும் அந்த ஜென்மங்களின் இடைவெளிகளை வெறுப்பேன். அதிலும் நீ வேண்டுமென்று . காலடிச் சுவடுகள்...

yenna punniyam seithen thaaye

என்ன புண்ணியம் செய்தேன் தாயே

தாயே உன் வயிற்றில் பிறக்க அந்த நட்சத்திரங்களும் துடிக்கும்.உன் மடியில் மகவாய்த் தவள அந்த நிலா மகளும் ஏங்குவாள். வீட்டுக் கூரையில் வாழும் நெசவாளி அந்த சிலந்திக்கும், தாழ்வாரத்தில் கூடு கட்டிய குழவிக்கும் கரிசனம் காட்டுபவளே உன் வயிற்றில் புழுவாய்ப் பிறந்தாலும் புண்ணியம் தானம்மா !… நான்...

kathalin valigalum pooparikkum

காதலின் வலிகளும் பூப்பறிக்கும்

காதலின் வலிகளும் பூப்பறிக்கும், மலரே கனவில் நீ கால் பதித்து நடக்கையில்.உன் கடைக்கண் பார்வைக்கு அந்த கடலையும் பரிசளிப்பேன். உன் இதழோரப் புன்னகைக்கு, அந்த தேவலோக சாகுந்தலத் தோட்டத்தைக் கொணர்வேன். வானில் களைந்து சேரும் மேகக் கூட்டமும் அன்பே உன் தரிசனம் கண்டால், இந்த பூமிக்கு வரத்...