Recent Info - Neerodai

thavippugalil punnagaiyin arthangal

தவிப்புகளில்

நம் முதல் சந்திப்பின்கடைசி நேரப்  பிரிவின் போது , thavippugalil punnagaiyin arthangal உன் முகத்தில் கண்ட அந்த தவிப்புகளில் புன்னகையின் அர்த்தங்களை ஆராயிந்து கொண்டிருப்பேன். என் இறுதி நேரம் வரை !!!!!!!   – நீரோடைமகேஸ் thavippugalil punnagaiyin arthangal

rosappoo kavithai

ரோஜாப்பூ

உன் தலைமுடிகளின் நடுவேஅலங்காரப்பொருளாக அந்த ரோஜாப்பூ, என்று மற்றவர்கள் சொல்கையில் …….. எனக்கு மட்டும் அந்த ரோஜாப்பூ, உன் தலைமுடி எனும் அலங்காரத்தின் நடுவே ஓர் ஊடகமாக தெரிகிறது. – நீரோடைமகேஸ்

ninaippathu naan endraal

நினைப்பது நான்

நினைப்பது நான் என்றால் என் நினைவுகளில் வட்டமிடும் ஒற்றை நில் நீ தானாடி. உளறல்கள் என்னுடையது என்றாலும் கனவில் என் உளறல்களுக்கு உருவம் கொடுப்பது நீதானடி. உயிரில் உறைந்த உண்மை கீதம் என் கனவில் நீ இசைக்கும் கொலுசொலி. ninaippathu naan endraal  – நீரோடைமகேஷ்

varaivalaiyil vittu selgiren

வரைவலையில்

தினம் தினம் நூறு கவிதைகள் உன்னால் உனக்காக …. உன்னிடம் அதை காட்ட? உன் மனம் காயப்படக்கூடாது என்ற பயம், என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் , அதனால் இந்த வரைவலையில் விட்டு செல்கிறேன்……….. – நீரோடைமகேஸ்

un peyarin arthangal

உன் பெயரின் அர்த்தங்கள்

தமிழ் அகராதியை புரட்டிப்பார்த்த போதுஅதில் தேவதை என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டு உன் பெயர் அதை அலங்கரித்து இருந்தது , ஏன் என்றால் உன் பெயரின் அர்த்தங்கள் அதை பூர்த்தி செய்துவிட்டதால் !!!!!!!  – நீரோடைமகேஸ்

kathalargale kobithuk kollaatheergal

காதலர்களே கோபித்து கொள்ளாதீர்கள்

காதல் எனும் சாக்கடையைகடக்கும் முன், என் சுவாசங்களை சேமித்து கொள்கிறேன், கடக்கும்போது அதை சுவாசிக்காமல் இருக்க ! காதலை வெறுப்பவர்களுக்கும், காதலால் வெறுக்கப்பட்டவர்களுக்கும், சமர்ப்பணம். – நீரோடைமகேஸ்

kathal agathiyaai

அகதியாய்

நீ என்னை கடந்து சென்றாலும் உன் வாசம் கடந்திட என் நுரையீரல் அனுமதிப்பதில்லை ………… உன் பெயரின் அர்த்தங்களை தேடி வெறும் அகதியாய் !!!!!!!! இந்த பிறப்பில் …….. – நீரோடைமகேஸ்

vizhuthugalaai vetri varum

ஆலமரம் – விழுதுகளாய் வெற்றி

விழுதுகள் ஓய்ந்தாலும்காய்ந்து போவதில்லை ஆலமரம், அந்த கனவையே துயில் எழுப்பும் வல்லமையுள்ள நண்பனே போராடு ! விழுதுகளாய் வெற்றி உன்னை சுற்றி வளைக்கும் ! – நீரோடைமகேஸ்

alangarippathu eppothu

அலங்கரிப்பது எப்போது

கனவில் மட்டுமே கைபிடித்துகடந்து வந்த பாதையில், நாம் நிஜத்தில் நிர்ப்பது எப்போது சொல்லடி பெண்ணே … தினம் தினம் கனவில் படையெடுக்கும் உன் அழகு, நிஜத்தில் என் இல்லம் அலங்கரிப்பது எப்போது ? – நீரோடைமகேஸ்

kadhalukku mariyaathai kavithai

காதலுக்கு மரியாதை

பிணத்திற்கு கொடுக்கும் மாலை மரியாதை கூட வேண்டாம் . எங்களை பிணமாக்கி விடாதீர்கள் என்று தான் சொல்கிறோம் . காதல் கல்லறையில் ஊமையாக்கப் படக்கூடாது. என்பதற்காக ! – நீரோடைமகேஸ்