காதலர்களே கோபித்து கொள்ளாதீர்கள்
காதல் எனும் சாக்கடையைகடக்கும் முன், என் சுவாசங்களை சேமித்து கொள்கிறேன், கடக்கும்போது அதை சுவாசிக்காமல் இருக்க ! காதலை வெறுப்பவர்களுக்கும், காதலால் வெறுக்கப்பட்டவர்களுக்கும், சமர்ப்பணம். – நீரோடைமகேஸ்
காதல் எனும் சாக்கடையைகடக்கும் முன், என் சுவாசங்களை சேமித்து கொள்கிறேன், கடக்கும்போது அதை சுவாசிக்காமல் இருக்க ! காதலை வெறுப்பவர்களுக்கும், காதலால் வெறுக்கப்பட்டவர்களுக்கும், சமர்ப்பணம். – நீரோடைமகேஸ்
நீ என்னை கடந்து சென்றாலும் உன் வாசம் கடந்திட என் நுரையீரல் அனுமதிப்பதில்லை ………… உன் பெயரின் அர்த்தங்களை தேடி வெறும் அகதியாய் !!!!!!!! இந்த பிறப்பில் …….. – நீரோடைமகேஸ்
விழுதுகள் ஓய்ந்தாலும்காய்ந்து போவதில்லை ஆலமரம், அந்த கனவையே துயில் எழுப்பும் வல்லமையுள்ள நண்பனே போராடு ! விழுதுகளாய் வெற்றி உன்னை சுற்றி வளைக்கும் ! – நீரோடைமகேஸ்
கனவில் மட்டுமே கைபிடித்துகடந்து வந்த பாதையில், நாம் நிஜத்தில் நிர்ப்பது எப்போது சொல்லடி பெண்ணே … தினம் தினம் கனவில் படையெடுக்கும் உன் அழகு, நிஜத்தில் என் இல்லம் அலங்கரிப்பது எப்போது ? – நீரோடைமகேஸ்
பிணத்திற்கு கொடுக்கும் மாலை மரியாதை கூட வேண்டாம் . எங்களை பிணமாக்கி விடாதீர்கள் என்று தான் சொல்கிறோம் . காதல் கல்லறையில் ஊமையாக்கப் படக்கூடாது. என்பதற்காக ! – நீரோடைமகேஸ்
உன் உதடுகள் உச்சரிக்கும் சம்மதம் என்ற அந்த ஒரு வார்த்தையில் தான் என் ஓராயிரம் ஜென்மங்கள் அர்த்தப்படும் … அர்த்தங்களை தேடி இந்த ஜென்மத்தில் !!! – நீரோடைமகேஸ்
இதயத்தின் அறைகளில் ஒழிந்திருக்கும், வலிகளின் தேடலில் இருந்த நான் இப்போது அவசர சிகிச்சை பிரிவிவுக்காக உன் இதயம் தேடி ! வலிகளின் காரணி நீ எனபது தெரியாமல் – நீரோடைமகேஸ்
ஆன்மிகவாதியாக யோகத்தில்நான் இருந்தாலும் , என் கடவுள் அடிக்கடி தொலைந்து போகிறார் ? அன்பே உன்னை என்னிடம் சேர்க்கும்சம்மதம் பெற !சம்மதங்கள் தேடி நானும் கடவுளுக்கு போட்டியாக உன்னை தேடும் பணியில். – நீரோடைமகேஸ்
உன் விரல் நுனியில் உள்ளஅழுக்கு கூடஉன் கைபடும் மணலின் உரமாக மாறட்டும். பார்வை படும் மேடு பள்ளங்களில் உன் வெற்றி மறைந்திருக்கலாம், போராடு தோழனே ! – நீரோடைமகேஸ்
உன் கால்களில் உரையாடும் கொலுசு மணிகள் கூட ,உன் முகம் பார்க்க முடியாத சோகத்தில் கிடக்க… என் இரு விழிகள் மட்டும் நாள்தோறும் உன் பூ முகம் பதித்து செல்கிறது….. பார்வையில் படமெடுத்து புகைப்படமாய் உன் முகம் மட்டுமே என் இதயக் கூட்டில் ……………. உன் இதயத்தில்...