ஜென்மங்கள் அர்த்தப்படும்
உன் உதடுகள் உச்சரிக்கும் சம்மதம் என்ற அந்த ஒரு வார்த்தையில் தான் என் ஓராயிரம் ஜென்மங்கள் அர்த்தப்படும் … அர்த்தங்களை தேடி இந்த ஜென்மத்தில் !!! – நீரோடைமகேஸ்
உன் உதடுகள் உச்சரிக்கும் சம்மதம் என்ற அந்த ஒரு வார்த்தையில் தான் என் ஓராயிரம் ஜென்மங்கள் அர்த்தப்படும் … அர்த்தங்களை தேடி இந்த ஜென்மத்தில் !!! – நீரோடைமகேஸ்
இதயத்தின் அறைகளில் ஒழிந்திருக்கும், வலிகளின் தேடலில் இருந்த நான் இப்போது அவசர சிகிச்சை பிரிவிவுக்காக உன் இதயம் தேடி ! வலிகளின் காரணி நீ எனபது தெரியாமல் – நீரோடைமகேஸ்
ஆன்மிகவாதியாக யோகத்தில்நான் இருந்தாலும் , என் கடவுள் அடிக்கடி தொலைந்து போகிறார் ? அன்பே உன்னை என்னிடம் சேர்க்கும்சம்மதம் பெற !சம்மதங்கள் தேடி நானும் கடவுளுக்கு போட்டியாக உன்னை தேடும் பணியில். – நீரோடைமகேஸ்
உன் விரல் நுனியில் உள்ளஅழுக்கு கூடஉன் கைபடும் மணலின் உரமாக மாறட்டும். பார்வை படும் மேடு பள்ளங்களில் உன் வெற்றி மறைந்திருக்கலாம், போராடு தோழனே ! – நீரோடைமகேஸ்
உன் கால்களில் உரையாடும் கொலுசு மணிகள் கூட ,உன் முகம் பார்க்க முடியாத சோகத்தில் கிடக்க… என் இரு விழிகள் மட்டும் நாள்தோறும் உன் பூ முகம் பதித்து செல்கிறது….. பார்வையில் படமெடுத்து புகைப்படமாய் உன் முகம் மட்டுமே என் இதயக் கூட்டில் ……………. உன் இதயத்தில்...
நாத்திகனைக் கூடகடவுளாக பார்க்கும்உலகம். தனக்கு, தானே கடவுள் !.!.! தனக்கு, தானே நாத்திகன் !.!.! எனபது தெரியாமல் !!!! – நீரோடை மகேஸ்
by Neerodai Mahes · Published May 8, 2010 · Last modified September 20, 2022
பிறப்பையும் இறப்பையும் இணைக்கும் கல்லறை கல்வெட்டின்நாட்கள் சொல்லும் , கருவில் சுமந்து அழகான வாழ்க்கை தந்தவளின் நினைவுகளையாவது சுமந்து கொண்டிருக்கிறேன்…. தயவு செய்து இடித்து விடாதீர்கள் !!!!!!! கல்லறை கூட தாய் அன்பை சொல்லும். – நீரோடை மகேஸ்
என்னை இந்த பூமி என்னும் நரகத்தில் தள்ளிவிட்ட இராட்சசி தான் என் தாய் ………………. -குப்பை தொட்டியில் போடப்பட்ட குழந்தையின் குமுறல்……… குப்பைதொட்டி மகவுக்காக மகேஷ் இன் வரிகள் ….. – நீரோடைமகேஷ்
உன் நினைவுகளை சுமந்து கொண்டு செத்துவிடக் கூட விருப்பம் இல்லையடி…… ஏன் என்றால் நான் செத்த பிறகு என் உடல் உன்னை விட்டு அந்த கல்லறையை, சுமந்து கொண்டு இருக்கும் என்பதால். நினைவுகள் சுமந்தபடி – நீரோடைமகேஷ்
நூலகத்தில் நாள் முழுவதும் தேடியும் இல்லாத அந்த புத்தகம். நினைவில் அந்த புத்தகத்தின் பெயர் இருந்தாலும் என் கண்கள் உன் பெயர் கொண்ட புத்தகத்தையே தேடிய வண்ணம் . என் நூலகமே நீதானடி…. – நீரோடைமகேஷ்